ஷாஹி டொமேட்டோ
Page 1 of 1
ஷாஹி டொமேட்டோ
தேவையான பொருள்கள்:
தக்காளி = 800 கிராம்
உருளைக்கிழங்கு = 500 கிராம்
சீஸ் = 500 கிராம்
கோவா = 50 கிராம்
தயிர் = அரை கப்
தனியா பொடி = அரை ஸ்பூன்
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி = சிறிதளவு
வெங்காயம் = 200 கிராம்
கரம் மசாலா பொடி = 1 ஸ்பூன்
சீரகம் = 1 ஸ்பூன்
நெய் = கால் கப்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக விட்டுப் பின் உரித்து மசித்துக் கொள்ளவும். கோவா, சீஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை உதிர்த்து 2 ஸ்பூன் நெய்யில் சீரகத்தை வெடிக்க விட்டுப் பின் வதக்கவும். இதனோடு இஞ்சியை தோல் சீவி அரைத்து வதக்கவும். அடுத்து உப்பு கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கவும்.
தக்காளியை மேலே சிறிதளவு விட்டு ஒரு பாத்திரம் போல் நறுக்கவும். நறுக்கிய தக்காளியினுள் இருக்கும் தக்காளி சாறு, விதை ஆகியவற்றை மெதுவாக ஸ்பூனால் எடுத்துத் தனியாக வைக்கவும்.
வெங்காயத்தை உரித்து தனியா பொடி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி ஆகியவற்றுடன் அரைக்கவும்.
வாணலியில் மீதி நெய்யை விட்டுக் காய்ந்ததும் தயிர் அரைத்த வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
அடுத்து தக்காளியில் சாறு, விதைகளை சேர்த்து மீண்டும் சிறிது கொதிக்க விடவும். மூடி போல் நறுக்கி இருக்கும் தக்காளி கிண்ணங்களில் உருளைக்கிழங்கு வதக்கலை வைத்து மூடி 3 நிமிடம் வைத்திருந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சுவையான ஷாஹி டொமேட்டோ தயார். இதை ரைஸ், பிரட், நாண், ஆப்பம், சப்பாத்தி, நூடுல்ஸ் போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
உருளைக்கிழங்குகள் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum