டொமேட்டோ ரெயின்போ
Page 1 of 1
டொமேட்டோ ரெயின்போ
தேவையான பொருள்கள்:
தக்காளி = அரை கிலோ
வெங்காயம் = 2
இஞ்சி = சிறிய துண்டு
முட்டை = 4
பசலைக் கீரை = 200 கிராம்
பிரிஞ்சி இலை =1
கிராம்பு = 2
கேரட் = 1
சீஸ் துருவியது = அரை கப்
பால் = 1 கப்
மிளகு = 1 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை இரண்டிரண்டாக நறுக்கவும். பிறகு ஒரு ஸ்பூனால் சுரண்டி உள்ளே இருக்கும் விதைப் பகுதியை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகை பொடித்து உப்போடு கலக்கவும். இந்த மிளகு கலவையை முட்டையை உடைத்து மசிந்துக் கொண்டு தக்காளியில் நிரப்பவும்.
பசலைக் கீரையை வேகவிட்டு அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். இஞ்சியை தோல் நீக்கி அரைத்துக் கொள்ளவும். கேரட்டைத் துருவிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெங்காயம், கிராம்பு, பிரிஞ்சி இலைகளை போட்டு பொன்னிறமாகும் படியாக வதக்கவும். அடுத்து இஞ்சி விழுதைப் போட்டு வதக்கவும்.
பிறகு வெந்த பசலைக் கீரை சேர்த்து வதக்கவும். அடுத்து உப்பு, தக்காளியில் சுரண்டி எடுத்ததையும், கேரட்டையும் சேர்த்து பால் கலந்து கொதிக்க விடவும். இவற்றை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
அடுத்து தக்காளி நிரப்பி வைத்திருப்பதை ஒன்றோடு ஒன்று படாமல் வைக்கவும். இதை அப்படியே மூடி மிதமான தீயில் 5 நிமிடம் வைத்து அரை கட்டு கொத்தமல்லியை ஆய்ந்து அதோடு சீஸ் சேர்த்துத் தூவி சுட சுட பரிமாறவும்.
சுவையான டொமேட்டோ ரெயின்போ தயார். இதை விருந்தின் போது தயாரிக்கலாம். ரைஸோடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum