இது திருச்சி ஸ்பெஷல் பட்டணம் பக்கோடா
Page 1 of 1
இது திருச்சி ஸ்பெஷல் பட்டணம் பக்கோடா
மெது பக்கோடா, வெங்காய பக்கோடா, முந்திரி
பக்கோடா, சிக்கன் பக்கோடா, தூள் பக்கோடா... என பல பக்கோடாக்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டணம் பக்கோடா? அது திருச்சி ஸ்பெஷல். மெயின்கார்டு கேட், மேல் அரண் சாலையில், தேவர் ஹாலுக்குப் பக்கத்தில் உள்ள ஆதிகுடி காபி கிளப்புக்குப் போனால், சூடான இந்த பட்டணம் பக்கோடா வை ருசித்துச் சாப்பிடலாம்.
பார்க்க போண்டா கணக்காக இருந்தாலும், வாயில்
போட்டால் நொடியில் கரைந்து விடும் இந்த ‘பட்டணம்
பக்கோடா’வுக்குப் பின்னால் 94 வருட திருச்சியின்
சரித்திரம் புதைந்து கிடக்கிறது.
லால்குடியை ஒட்டியுள்ள சிறிய கிராமம் ஆதிகுடி.
இக்கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராம அய்யர், 1916ம்
ஆண்டில் தொடங்கியதுதான் ஆதிகுடி காபி கிளப்.
திருச்சியில் தொடங்கினாலும் தன் ஊர்மேல் உள்ள
காதலால் அதன் பெயரையே காபி கிளப்புக்கு
வைத்து விட்டார்.
தேவர் ஹாலுக்கு நாடகம் போட வரும் பிரபலமான கலைஞர்கள், ரசிக்கவரும் தனவந்தர்கள் எல்லோரும் கொஞ்ச காலத்திலேயே ஆதிகுடி காபி கிளப்புக்கு ரசிகர்களாகி விட்டார்கள்.கலைஞர், எம்.ஆர்.ராதா, சிவாஜி, நவாப் ராஜ மாணிக்கம்... என பல மேதைகளின்
பாதங்கள் பதிந்து கிடக்கிறது இந்த காபி கிளப்பில்.
அந்தக்காலம் தொட்டே, பாதாம் அல்வா, கோதுமை
அல்வா, பன் அல்வா, காசி அல்வா, தம்ரூட் அல்வா
என நாளுக்கொரு ஸ்பெஷல் ஸ்வீட், ஸ்பெஷல்
காரம் போட்டு அசத்துவாராம் அவர்.
இவற்றைத் தாண்டி அய்யரின் கைவண்ணத்தில் உருவான பட்டணம் பக்கோடா, ஒட்டுமொத்தமாக திருச்சி மக்களை அடிமையாக்கி விட்டது.
காலப்போக்கில் அய்யரால் கிளப்பை நடத்த
முடியாமல் போக, ராயர், அய்யங்கார் என பலரிடம்
கைமாறி கடைசியில் அதே கிளப்பில் வேலை செய்த
ராமகிருஷ்ண அய்யர் கையில் வந்து நின்றது. இப்
போது அவரது பிள்ளைகள் நான்கு பேர் இந்த
கிளப்பை நிர்வகிக்கிறார்கள்.
‘‘அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் கடலை
மாவில் செய்த உதிரி பக்கோடாதான் கிடைக்கும்.
முதன்முதலில் போண்டா சைசுக்கு மென்மையாக
பக்கோடா போட்ட அய்யர், பட்டணத்தில் மட்டுமே
கிடைக்கும் என்பதால் ‘பட்டணம் பக்கோடா’ என்று
பெயர் வைத்திருக்கலாம்...’’ என்று சிரிக்கிறார் ராம
கிருஷ்ண அய்யரின் மகன் கண்ணன்.எந்த நேரம் போனாலும் சூடாக சாப்பிடலாம்.தேங்காய், கொத்தமல்லி சட்னியோடு, போதுமென்
கிற அளவுக்கு சாம்பாரும் ஊற்றுகிறார்கள்.
செய்முறையிலும் ரகசியம் ஏதுமில்லை. 1 பங்கு
கடலை மாவு, 2 பங்கு அரிசி மாவு. இதுதான் இந்த
பதார்த்தத்தின் சூத்திரம். இவற்றோடு பச்சை மிளகா
ய், இஞ்சி, நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து
கெட்டியாகப் பிசைந்து, எண்ணெயில் பொரித்
தெடுக்க வேண்டும். இதுதான் பட்டணம்
பக்கோடா.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மெதுபக்கோடா அல்லது பட்டணம் பக்கோடா
» சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: ரிப்பன் பக்கோடா
» அடைக்கல பட்டணம்
» திருச்சி மாவட்ட திருத்தலங்கள்
» திருச்சி மலைக்கோட்டை கோவில்
» சமையல்:தீபாவளி ஸ்பெஷல்: ரிப்பன் பக்கோடா
» அடைக்கல பட்டணம்
» திருச்சி மாவட்ட திருத்தலங்கள்
» திருச்சி மலைக்கோட்டை கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum