சிந்தி பக்கோடா
Page 1 of 1
சிந்தி பக்கோடா
என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு,
காலிஃபிளவர், கோஸ், கேரட்,
வெங்காயம், கொத்தமல்லி எல்லாம் சேர்த்து - 300 கிராம்,
இஞ்சி, பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப,
கடலை மாவு - 250 கிராம்,
அரிசி மாவு - 50 கிராம்,
உப்பு, மிளகாய் தூள் - தேவைக்கேற்ப,
முந்திரிப்பருப்பு - சிறிது,
சாட் மசாலா - சிறிது,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், காய்கறி, முந்திரி எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்கவும். அதில் கொதிக்கும் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் அளவுக்குக் கலந்து, பக்கோடா மாவு பதத்துக்கு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எண்ணெய் காய வைத்து, இந்த மாவில் சற்று பெரியதாகக் கிள்ளிப் போட்டுப் பொரிக்கவும். முக்கால் வாசி வெந்ததும், வடித்து எடுத்து விட்டு, ஆற விட்டு, மீண்டும் அதை உடைத்துப் பொரிக்க வேண்டும். பொன்னிறத்தில் பொரித்தெடுத்து, சாட் மசாலா தூவி, சாஸ் உடன் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum