மலபார் பத்திரி நீங்களும் செய்யலாம்!
Page 1 of 1
மலபார் பத்திரி நீங்களும் செய்யலாம்!
என்னென்ன தேவை?
பச்சரிசி - கால் கிலோ
தேங்காய் - கால் மூடி
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 2 பல்
சீரகம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அரிசியை களைந்து காய வைத்து இடியாப்ப மாவு பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். வெங்காயம், பூண்டு, சீரகத்தோடு தேங்காய்பூ சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். அகலமான வாணலியை அடுப்பில் வைத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள். அதில் சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
நன்கு கொதிவந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய்பூ கலவையைச் சேருங்கள். பின், தீயைக் குறைத்து விட்டு அரிசிமாவை சிறிது சிறிதாகப் போட்டு கட்டிப்படாமல் கிளறுங்கள். பின்னர், 5 நிமிடம் மூடிவைத்து வேக விடுங்கள். மாவு சற்றுக் குழைந்து கெட்டியான பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
பின்னர், சூடு பொறுக்கும் பதத்தில் மாவை எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள். அந்த உருண்டைகளை சப்பாத்தி கட்டையால் பூரிக்குத் தேய்ப்பது போல தேய்த்துக் கொள்ளுங்கள். மாவு பூரிக்கட்டையில் ஒட்டாமல் இருக்க, அரிசிமாவை தூவிக் கொள்ளலாம். தேய்த்த பத்திரிகளை சூடான தோசைக்கல்லில் ஒவ்வொன்றாகப் போட்டு சுட்டு எடுங்கள். மலபார் பத்திரி ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலபார் பத்திரி நீங்களும் செய்யலாம்!
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» கொத்துக்கறி நீங்களும் செய்யலாம்!
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» நீங்களும் செய்யலாம்! ஓம முறுக்கு
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» கொத்துக்கறி நீங்களும் செய்யலாம்!
» நீங்களும் செய்யலாம்! கான சம்மந்தி
» நீங்களும் செய்யலாம்! ஓம முறுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum