சோளார் தால்
Page 1 of 1
சோளார் தால்
என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு - 1 கப்,
தண்ணீர் - 3 கப்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
கிராம்பு - 2,
பட்டை - சிறிய துண்டு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
துருவிய இஞ்சி - சிறிது,
பச்சை மிளகாய் - 1,
தேங்காய் (பல் பல்லாக நறுக்கியது) - சிறிது,
எண்ணெய், நெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கொத்தமல்லி - அலங்கரிக்க.
எப்படிச் செய்வது?
கடலைப் பருப்பை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அடி கனமான பாத்திரத்தில் வேக விடவும். பருப்பு குழையாமல் வெந்து வரும் போது, மஞ்சள் தூள், கிராம்பு, பட்டை, துருவிய இஞ்சி சேர்த்து வேக விடவும். 5 நிமிடங்கள் கழித்து பருப்பு வெந்ததும் இறக்கி, உப்பு, சர்க்கரை சேர்க்கவும். எண்ணெயை சூடாக்கி, சீரகம், காய்ந்த மிளகாய், தேங்காய் பல் ஆகியவற்றைத் தாளித்து, பருப்பில் கொட்டி, நெய்யை விட்டுக் கிளறி, கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறவும். இதை குக்கரிலும் செய்யலாம். ஆனால், பருப்பு குழையக் கூடாது. வெந்து, தனித்தனியே பருப்பு தெரிய வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum