தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலைப் பருப்பு மிளகு சுண்டல்

Go down

கடலைப் பருப்பு மிளகு சுண்டல் Empty கடலைப் பருப்பு மிளகு சுண்டல்

Post  ishwarya Mon Feb 18, 2013 5:52 pm

என்னென்ன தேவை?

கடலைப் பருப்பு -1 கப், தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவு, இஞ்சி -1 துண்டு, உப்பு - தேவைக்கு ஏற்ப, வறுத்து, கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன், தாளிக்க - கடுகு, உளுந்து, எண்ணெய்.

எப்படிச் செய்வது?

கடலைப் பருப்பில் உப்பு சேர்த்துப் பதமாக வேக வைக்கவும். இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு வேக வைத்த கடலைப் பருப்பு, வறுத்துப் பொடித்த மிளகு, சீரகம், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். வித்தியாசமான மணம் மற்றும் சுவையில் இருக்கும் இந்த சுண்டல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum