தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலைப் பருப்பு ஆம்லெட்

Go down

கடலைப் பருப்பு ஆம்லெட் Empty கடலைப் பருப்பு ஆம்லெட்

Post  ishwarya Mon Feb 25, 2013 2:14 pm

கடலைப் பருப்பு 400 கிராம்
முட்டை 3
பெரிய வெங்காயம் 3
பச்சை மிளகாய் 10
இஞ்சி ஒரு சிறு துண்டு
பூண்டு 1
கடலையெண்ணெய் 150
கொத்தமல்லி இரண்டு மூன்று கொத்து
தேவையான உப்பு
கடலைப்பருப்பை நன்றாகக் கழுவி, சுத்தம் செய்து ஆட்டுரலில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டு இவற்றை அம்மியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

அரைத்து வைத்துள்ள கடலை மாவை தோசை மாவு போல் தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். முட்டைகளை உடைத்து கரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றவும். நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம், மல்லித்தழை இவைகளையும், இஞ்சி, பூண்டு அரைத்ததையும் மாவில் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.

ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் தடவி அடுப்பில் வைக்கவும். கல்காய்ந்ததும் கரைத்து வைத்த மாவில் ஒரு கரண்டி மாவை எடுத்து வட்டமாய் ஊற்றவும். நன்றாக வெந்ததும் மறுபுறம் திருப்பி போடவும். மறுபுறம் சிவந்ததும் எடுத்து விடவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum