தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அடேங்கப்பா…..மார்கழி மாசத்துக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா? MUST READ

Go down

அடேங்கப்பா…..மார்கழி மாசத்துக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா? MUST READ Empty அடேங்கப்பா…..மார்கழி மாசத்துக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா? MUST READ

Post  ishwarya Mon Feb 18, 2013 1:23 pm

ஒரு முப்பது நாற்பது வருஷத்துக்கு முந்தி பார்த்தீங்கன்னா மார்கழி மாசம்னாலே அதிகாலை வீதியே அதகளப்படும். வீட்டிலுள பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அதிகாலை எழுந்து வீட்டை கூட்டி பெருக்கி கோலம் போட்டு குளித்து பக்தி பாடல் பாடுவாங்க. கோவில் இருக்கும் ஊரில் மார்கழி மாத பஜனைப் பாடல்கள், ஊர்வலம்னு களைகட்டும்.

மேற்கத்திய கலாச்சாரம் நமது வேலையில் ஊடுருவி தற்போது நமது வாழ்க்கை முறையிலும் ஊடுருவிவிட்டது. முக்கியத்துவம் நிறைந்த விஷயங்கள் நமது நேரத்தை ஆக்கிரமித்தது போய் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நமக்கு பயன்தராத விஷயங்களுக்கு நாம் அதி முக்கியத்துவம் கொடுத்து அதில் நேரத்தை வீணடித்து அதை பெருமையாக கருதும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

காலைல சீக்கிரம் எழுந்திருக்கணும், கோவிலுக்கு போகணும் நினைக்கிறோம்… எங்கே இந்த அவசர யுகத்துல போகமுடியுது என்பதே பலரின் நிலைப்பாடு. பஸ்லயோ, டூ-வீலர்லயோ போகும்போது ஏதாவது கோவிலை பார்த்தா கன்னத்துல போட்டுக்கிட்டு போறதை பட்டிமன்றத்துல, பொது நிகழ்ச்சிகள்ல கிண்டலடிப்பாங்க. ஆனா அப்படி போற போக்குல கன்னத்துல போட்டுக்குறது கூட இப்ப பெரிய விஷயமாயிடுச்சு.

ஃபாலோ பண்றமோ இல்லையோ சாப்பிடுறதுக்கு நல்ல சத்தான உணவு; காய்கறிகள் பழங்கள் எடுத்துக்கணும் அப்போ தான் ஹெல்தியா இருக்கமுடியும் என்பதில் ஓரளவு அனைவருக்கும் விழிப்புணர்வு இருக்கிறது. அதே மாதிரி தினமும் உடற்பயிற்சி யோகா இதெல்லாம் செய்கிறோமோ இல்லையோ அதையெல்லாம் செஞ்சா உடம்புக்கு நல்லது என்பது ஓரளவு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு. (காரணம் சுகர், பி.பி. உள்ளிட்ட வியாதிகளுக்காக எல்லாரும் டாக்டர் கிட்டே போகும்போது அவர் சொல்றதுனால தான். இல்லேன்னா நமக்கு எங்கே தெரிஞ்சிருக்கப்போகுது?).

அதே மாதிரி வசதியான வாழ்க்கைக்கு தேவையான (LUXURIOUS & COMFORTABLE LIFE STYLE) க்கு தேவையானவற்றை சம்பாதிப்பதில் தான் நமக்கு வாழ்வின் பெரும்பாலான நேரமும் ஆற்றலும் செலவாகிறது. ஆனா ஆன்மாவுக்கு உணவிடுவது பற்றி எவருமே சிந்திப்பது இல்லை. ஆகையால் தான் பிரச்னை என்று வரும்போது அதை எதிர்கொள்ளக்கூடிய பக்குவமோ தைரியமோ எவருக்கும் இருப்பதில்லை. மனமும் அதற்கு தயாராக இருப்பதில்லை. விளைவு தவறான முடிவு எடுக்கப்படுகிறது. அது வாழ்க்கைக்கும் மிகப் பெரிய தண்டனையாக மாறிவிடுகிறது. நமது அனைத்து சந்தோஷங்களையும் குலைத்துவிடுகிறது.

மனிதனின் வாழ்வே 32 பற்களுக்கிடையே வாழும் நாவைப் போன்றது தான். எப்போது எந்தப் பிரச்னை நம்மை தாக்கும் என்றும் எவரும் சொல்லமுடியாது. எனவே எதையும் சந்திக்கக்கூடிய ஆன்ம பலத்துடன் அனைவரும் இருக்கவேண்டும். அதற்கு உறுதணையாக இருப்பவை ஆலய தரிசனம் மற்றும் இறைவழிபாடு ஆகியவை தான்.

அதுவும் மார்கழி மாத ஆலய தரிசனம் தீராத பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்கவல்லது. உங்கள் ஆன்மபலத்தை அதிகரித்து அனைத்து நற்பலன்களையும் கொட்ட வல்லது. ராகு-கேது, சனி, என தோஷமிருப்பவர்கள் அனைவரும் தயங்காது சோம்பல்படாது இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

மார்கழி மாதம் நாளை பிறக்கிறது. இது, மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். மார்கழி என்பது எண்ணற்ற மகத்துவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான மாதமாகும். கிருஷ்ண பரமாத்மா கீதையில் “மாதங்களில் நான் மார்கழியாவேன்” என்று கூறுகிறானென்றால் மார்கழியின் சிறப்பை யூகித்துக்கொள்ளுங்கள்.

அப்படி என்றால் அதை ஏன் பீடை மாதம் என்கிறார்கள் என்று சிலர் கேட்கக்கூடும். அது பீடை மாதம் அல்ல… பீடுடைய மாதம் (அதாவது செல்வம் மிகுந்த மாதம்) என்பது தான் மருவி நாளடைவில் பீடை மாதம் என்றாகிவிட்டது.

நம் சம்பிரதாயப்படி, குறிப்பிட்ட ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை. காரணம் இவை முழுக்க முழுக்க இறைவழிப்பட்டுக்கு என்றே ஒதுக்கப்படவேண்டிய மாதங்கள். அதிலும் மார்கழி மகத்துவம் நிறைந்தது. எனவே நம் வாழ்வை அர்த்தமுள்ள தாக்கி கொள்ளவேண்டுமானால், இம்மாதத்தில் சரணாகதி என்னும் உயர் தத்துவத்தை கடை பிடிக்கவேண்டும்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதில் உத்தராயணமே பகல் என்றும் , தட்சணாயனமே இரவென்றும் கூறும். இந்த நிலையில் தைமாதத்திற்கு முந்திய மாதம் செவ்வானக் காலமாகும். அந்த நிலையில் மார்கழி மாதம் , இருளில் நீண்ட காலம் புழுங்கியவர்களுக்குத் துன்பமெல்லாம் நீங்கிப் பொழுது விடியும் காலமாக இன்பமூட்டுவது இயல்பே. நாள் விடிவதென்றால் நம் கணக்கில் ஆண்டு பிறப்பதேயாகும்.

மார்கழி மாதம் என்பது தேவர்களது ஒரு நாளில் விடியற்காலை பொழுதாகும். விடியற்காலை என்றாலே மங்களகரமானது தானே? எனவே இந்த பெருமை பொருந்திய மாதம் முழுதும் இறை வழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்” என்று வட மொழியில் சொல்வர். “மார்கம்” என்றால், வழி- “சீர்ஷம்” என்றால், உயர்ந்த- “வழிகளுக்குள் தலைசிறந்தது” என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இதற்கும் காரணமிருக்கிறது.

வருடத்தில் மற்ற நாட்களில் கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுதும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைத்துவிடும்.

தமிழகத்தின் மார்கழி மாதம் வந்துவிட்டாலே அதிகாலை வேளையில் வைணவக் கோயில்கள் மட்டுமின்றி அனைத்து ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகளும், பக்தி இசையும் மணக்கத் தொடங்கிவிடும்.

இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர். ஆடியில் அம்பாள் வழிபாடு, புரட்டாசியில் பெருமாள் வழிபாடு, மார்கழியில் அனைத்து தெய்வ வழிபாடு என, வழிபாட்டிற்கு மட்டுமே அந்த மாதங்களை பயன்படுத்திக் கொள்கிறோம்.

இந்து சமயத்தைப் பின்பற்றும் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் தமிழ்க் கோயில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் மார்கழி மாத அதிகாலையில் இந்தத் திருப்பாவை பாடல் வழிபாடு நடத்தப்படுவது நடைமுறை வழக்கமாகவும் இருந்து வருகிறது. அனைத்து சைவ, வைணவ ஆலயங்களிலும் மார்கழி பூஜைக்காக அதிகாலை வேளையில் கோயில் நடை திறக்கப்பட்டு வருகின்றன.

மார்கழி மாத நோன்பு, மிகவும் சிறந்தது. மார்கழி மாத வழிபாடு வழி வழியாகத் தொடர்கிறது. மார்கழி அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து விடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும்.

சூரிய உதயமானதும், உங்கள் இஷ்ட தெய்வம் குடியிருக்கும் கோவிலுக்குச் சென்று, சுவாமியை தரிசிக்க வேண்டும். “இறைவா… என் வாழ்வை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ தரும் நல்லது, கெட்டதை அன்போடு ஏற்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன். நீயே கதியென சரணாகதி அடைந்து விட்ட என்னை வழி நடத்து…” என்று பரிபூரணமாக நம்மை அவனிடம் ஒப்படைத்துவிடவேண்டும்.

மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும்.

மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மார்கழியில் காலையில் எழுந்து வெளியே நடந்தால் ஓசோன் வாயு நுரையீர லுக்கு என்று புத்துணர்ச்சி தரும். மார்கழி மாத காற்று தோலுக்கும் , வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.மனம் தூய்மையாகும். கோலமும், பாடலும் மனதை ஒருமைப்படுத்தி உணர்வுகளைச் செம்மைப்படுத்தும். கோலத்திற்கு அரிசி மாசு பொடி பயன்படுத்துவது நல்லது. சாதாரண கோலப் பொடிகளை பயன்படுத்தக் கூடாது.

எனவே குளிர் அதிகமுள்ள இந்த மார்கழி மாதத்தில் சூரிய உதயத்திற்கு பின்பும் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டிராமல், அதிகாலை எழுந்து கோவில்களுக்கு சென்று இறைவனை தரிசித்து பலன் பெறுவோம். அதிகாலை எழுந்திருப்பதே கஷ்டமான காரியம். அதுவும் குளிர்காலத்தில் இது மிக மிக கஷ்டம் தான். ஆனால் பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டால் இதை விட இனிமையானது வேறு எதுவும் இல்லை.

மார்கழி மாதம் முழுதும் அதிகாலை எழுந்து கோவிலுக்கு செல்ல விரும்புகிறவர்கள் தனிமையாக செல்வதைவிட ஒரு சிறு குழுவாக அல்லது நண்பர்கள் வட்டமாக செல்லலாம். எனவே இதில் ஆர்வமுள்ள நண்பர்களை தேடிப் பிடித்து அழைத்து செல்லுங்கள். நண்பர்களுடன் செல்லும்போது இன்னும் சௌகரியமாக சுறுசுறுப்பாக இருக்கும்.

நாம் இந்த மாதம் முழுதும் அதிகாலை எழுந்து நீராடி பூவிருந்தவல்லி வரதராஜ சுவாமி திருக்கோவிலுக்கு செல்வதாக உத்தேசித்துள்ளோம். மிக மிக பழமையான அதி அற்புத வைணவத் திருத்தலம் இது. நம்முடன் இந்த மார்கழி வழிப்பாட்டில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். நம் வாசகர்கள் / தள நண்பர்கள் பூவிருந்தவல்லி/போரூர் பகுதியில் இருப்பவர்கள் எவரேனும் இருந்தால் நம்முடன் இதில் கலந்துகொள்ளலாம். அதிகாலை என்பதால் டிராஃபிக் தொல்லை இருக்காது. காலை 5.00 மணிக்கு போனால் முக்கால் மணிநேரத்தில் திரும்பிவிடலாம்.

———————————————————————————————————–
குறிப்பு : மார்கழி மாதத்தில் சுப நிகழ்சிகள் நடத்தக்கூடாதே தவிர, அது தொடர்பாக முயற்சிகளில் தாராளமாக ஈடுபடலாம். உதாரணத்துக்கு ஜாதக பரிவர்த்தனை, வீடு வாசல் பார்ப்பது, இடம் தேடுவது, பெண் தேடுவது உள்ளிட்டவைகளை தாராளமாக செய்யலாம். அனைத்தையும் செய்து வைத்துக்கொண்டு தயார் நிலையில் இருந்து தை பிறந்ததும் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக்கொள்ளலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum