தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்!

Go down

பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்! Empty பித்ரு தோஷம் நீக்கும் ஒரு அற்புதத் தலம் + ஆதரவற்ற பெண்களும் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்!

Post  amma Mon Feb 18, 2013 1:08 pm

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். பித்ரு தோஷம் இருந்தால் அந்த வீட்டில் சுபகாரிய மற்றும் திருமணத் தடை, செய் தொழிலில் நஷ்டம்,அடிக்கடி ஏற்படும் விபத்து, நிம்மதியின்மை ஆகியவை காணப்படும்.

தாய் தந்தையர் மற்றும் அவர்களை பெற்றவர்களின் ஈமச் சடங்குகள் மற்றும் சிரார்த்தம், தெவசம் உள்ளிட்டவைகள் நடைபெறும்போது தவறாமல் அதில் கலந்துகொள்ளவேண்டும். இதெல்லாம் ஏன் எதற்கு என்று ஏகடியம் பேசுதல் கூடாது.

நமது முன்னோர்களுக்கும் பித்ருக்களுக்கும் உரிய சடங்குகளை தவறாமல் செய்து வரவேண்டும். நீங்கள் இங்கு சிரார்த்தத்தில் அளிக்கும் உணவும் நீருமே மேலே இருக்கும் நமது பித்ருக்களுக்கு உணவும் தண்ணீரும் ஆகும். நீங்கள் அவற்றை செய்ய தவறும்போதும் அவர்கள் பசியினாலும் தாகத்தினாலும் வாடுவர். அப்போது அவர்கள் உங்களை சபிப்பர். ஜாதகத்தில் இதற்கு பரிகாரமே கிடையாது.

ஆனால் முன்னோர்கள் கூறியுள்ள கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் ஓரளவு பித்ருதோஷம் குறையும்.

அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம் , எள்ளு இவற்றை கலந்து கொடுக்கவேண்டும். இப்படி செய்துவந்தால் பித்ரு தோஷத்தின் தாக்கம் குறையும். அதே போல், அவர்களின் நினைவு நாளன்று முறைப்படி தர்ப்பணம் முதலியவற்றை செய்து அன்னதானம் செய்யவேண்டும். தர்ப்பணம் போன்ற சம்பிரதாயங்கள் இல்லாதவர்கள் பெற்றோர்களது நினைவு நாளில் பயபக்தியுடன் சைவ சமையல் செய்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும்.

* ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரே ஒரு பெண். அவர்களும் காலமாகிவிடுகின்றனர். அவர்களுக்கு அந்த பெண் திதி கொடுக்கலாமா?

* திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் இவர்களுக்கெல்லாம் என்ன தான் வழி?

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார் சிரார்த்த சம்ரட்சண பெருமாள்.

இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணன் சேவை சாதிக்கிறார். பித்ரு வேளை பூஜை எனும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம். திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் 11 மணிக்குள் பெருமாள் சந்நிதிக்கு வர வேண்டும்.

மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க வேண்டும்.

இவ்வாறு சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரட்சணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நிதிக்கு வந்து பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் சம்பிரதாய திவசச்சமையல் போல வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம்.

கயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இந்த தலத்தில் உண்டு. பெண்கள் தங்கள் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்.

நம் தளம் சார்பாக இந்த கோவிலுக்கு (ஆலய தரிசனம்) செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. வருபவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகனம் ஏற்பாடு செய்யப்படும். பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறியவர்கள் அனைவரும் இதை நன்கு பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நம்முடன் வந்திருந்து அவரவர் தத்தங்கள் முன்னோர்களுக்கும் காலம் சென்ற பெற்றோருகளுக்கும் சிரார்த்தம் செய்யலாம்.

செல்லும் தேதி இதன் இந்த பதிவின் இரண்டாம் பாகத்தில் அளிக்கப்படும்.

வர விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயருடன் PITHRU DHOSHA PARIGARA VISIT என்று சப்ஜெக்டில் குறிப்பிட்டு நமக்கு simplesundar@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மறக்காது தங்கள் மொபைல் எண்ணை குறிப்பிடவும்.

இந்த கோவிலின் தலைமை குருக்கள் திரு.சம்பத் பட்டாச்சாரியா நம் தளத்திற்கு அளித்த விசேஷ பேட்டி + இந்த கோவிலின் விரிவான தல வரலாறு சிறப்பு ஆகியவை அடுத்த பதிவில். (இரண்டாம் பாகத்தில்).
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum