காந்த செந்தூரம்
Page 1 of 1
காந்த செந்தூரம்
தேவையான பொருட்கள்:
காந்தம் = 200 கிராம்
காடி நீர் = 1 லிட்டர்
கொள்ளு = 500 கிராம்
சோற்றுக் கற்றாழைச் சோறு = 500 கிராம்
எலுமிச்சம் பழச்சாறு.
வாழைப் பட்டைச்சாறு.
முருங்கைப் பட்டைச் சாறு.
பால்.
காந்தம் சுத்தி செய்யும் முறை:
காந்தத்தை ஒரு துண்டாக எடுத்துக் கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் காடி நீரை விட்டு அதனுள் காந்தத்தை வைத்து மூடி காடி நீர் அரையளவு சுண்டும் அளவுக்கு வைத்து காந்தத்தை எடுக்கவும். அல்லது இட்லி சட்டியில் காடி நீரை விட்டு இட்லி தட்டை வைத்து அதில் காந்தத்தை வைத்து 15 நிமிடங்கள் சீராக எரித்து இறக்கி காந்தத்தை தூய நீரில் கழுவிக் கொள்ளவும்.
அடுத்து 500 கிராம் கொள்ளை ஒரு மண் பானையில் போட்டு 1 லிட்டர் தூய நீர் விட்டு அதன் நடுவில் காந்தத்தை வைத்து மூடி ஒரு மணி நேரம் அவித்து எடுத்து கழுவி எடுத்து சோற்றுக் கற்றாழைச் சோற்றை மட்டும் ஒரு மண் பானையில் போட்டு நடுவில் காந்தத்தை வைத்து முதல் அரை மணி நேரம் அவித்து எடுத்து கழுவிக் கொள்ளவும். காந்தத்தை கல் உரலில் போட்டு நன்கு இடித்து, துணியால் முடிந்து முன் சொல்லிய படி கொள்ளில் அவித்துக் கொண்டு, காந்தத்தை மரத்தட்டில் கொட்டி நன்கு உலர்த்திக் கொள்ளவும்.
செய்முறை:
சுத்தி செய்த காந்தப் பெட்டியை கல்வத்தில் கொட்டி ஒரு மணி நேரம் அரைத்த பின் 500 மி.லிட்டர் எலுமிச்சம் பழச்சாற்றை சிறுக சிறுக விட்டு, சாறு தீரும் வரை கல்வத்திலேயே உலர விட்டு 500 மி.லி வாழைப் பட்டைச் சாற்றிலும், 500 மி.லி முருங்கைப் பட்டைச் சாற்றிலும் தனித்தனியாக அரைத்து வில்லை தட்டி நிழலில் உலர்த்தி ஒரு மண் அகலில் வைத்து மண் அகலால் மூடி வாயை ஏழு முறை சீலை மண் செய்து கொள்ளவும்.
இரண்டு சதுர அடி அகலமும், ஒரு அடி உயரமும் வரட்டியை அடுக்கி நடுவில் அகலை வைத்து அதன் மேல் ஒரு அடி உயரம் வரட்டியை அடுக்கி புடத்திற்கு நெருப்பு வைக்கவும். புடத்தை 6 மணி நேரம் ஆறவிட்டு மருந்தை எடுத்து கல்வகத்தில் வைத்து கறந்த பசும் பாலை (200 மி.லி) சிறுக சிறுக விட்டு அரைத்து வில்லை தட்டி நிழலில் உலர்த்தி முன்போல் புடம் போடவும். இப்படி மூன்று முறை செய்து 12 மணி நேரம் அரைத்து மருந்தைப் பத்திரப்படுத்தவும்.
உபயோகிக்கும் முறை:
10 நாட்கள் மருந்தை உண்டு ஒரு வாரம் மருந்தை நிறுத்தி மீண்டும் தொடரவும்.
தீரும் நோய்கள்:
மேக நோய்கள், சுவாசகாசம், கப நோய்கள், மூட்டு வலி, கீழ் பிடிப்பு, வாய்வு, வாதம், காது சம்பந்தப்பட்ட நோய்கள், வயிற்று நோய்கள், ஆண்மைக் குறைவு, மாதவிடாய் நோய்கள் ஆகிய நோய்கள் குறையும்.
பத்தியம்:
பழஞ்சோறு, பழங்குழம்பு, மாமிச உணவுகள், மதுவகைகள், புளிக்குழம்பு, பறங்கி, பூசணி, அகத்திக்கீரை, இயன்ற அளவு உப்பைக் குறைக் கொள்ளவேண்டும்.
கொள்ள வேண்டிய சிறப்பு உணவு:
மிளகு, சீரகம், பூண்டு, கொத்துமல்லி, வெந்நீர், பசு மோர், பசு நெய், பசும் பால், தேன், இளங்காய்கள், உப்பை முருங்கை இலை போட்டு வறுத்துப் பயன்படுத்தவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» இலிங்க செந்தூரம்
» அகஸ்தியர் செந்தூரம் -300
» காந்த சக்தி
» காந்த செந்தூரத்தின் பயன்கள்
» காந்த மருத்துவம் என்றால்...?
» அகஸ்தியர் செந்தூரம் -300
» காந்த சக்தி
» காந்த செந்தூரத்தின் பயன்கள்
» காந்த மருத்துவம் என்றால்...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum