அக்னி நட்சத்திரமா.. கத்திரி வெயிலா? கல்யாணம் பண்ணலாம்.. காதுகுத்த கூடாது
Page 1 of 1

பாரத நாட்டில் முன்னோர்களால் பல்வேறு விதமான சடங்குகள், சம்பிரதாயங்கள் தொன்று தொண்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இவைகள் எல்லாம் ரிஷிகள், சித்தர்கள் ஏற்படுத்தி தந்த வழிமுறையாகும். இதை ஆராய்ந்து பார்க்கும்போது ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு காரணமும், அறிவியல் முக்கியத்துவமும் உள்ளது.
இந்து மதத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் பஞ்சாங்கம் பார்த்து தீர்மானிக்கப்படுபவை. பஞ்சாங்கம் என்பது இந்து மத கால அட்டவணை. வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து அங்கங்களே ‘பஞ்ச அங்கம்’ எனப்படுகிறது. இந்த பஞ்சாங்க கணக்கின்படியே அக்னி நட்சத்திர காலம் கணக்கிடப்படுகிறது.
அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் காலகட்டம் சூரியனின் சஞ்சாரத்தை மையமாக வைத்து கணக்கிடப்பட்டுள்ளது. சூரியன் சித்திரை மாதம் மேஷ ராசியில் நுழைந்து, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் இருப்பார். சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் நுழைந்தவுடன் கோடைகாலத்தின் ஆரம்பமாக சூரியனின் கதிர்கள் நம்மை சுட்டெரிக்கிறது. மேஷ ராசி செவ்வாயின் வீடாக இருப்பதாலும், செவ்வாய் நெருப்புக் கோள் என்பதாலும் உஷ்ணம் உருவாகிறது.
சூரியன் பரணி நட்சத்திரம் 3&ம் பாதத்தில் நுழையும் காலம் முதல் ரோகிணி நட்சத்திரம் 2&ம் பாதம் முடியும் வரை உள்ள காலம் அக்னி நட்சத்திர காலமாகும். இதில் கிருத்திகை நட்சத்திரத்தில் செல்லும் காலத்தில், அதாவது சித்திரை கடைசி வாரம் தொடங்கி, வைகாசி முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான ‘கத்திரி வெயில்’ எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரியன், அதிதேவதை அக்னி. ஆகவேதான் நெருப்புக்கு இணையான வெப்பத்தை கக்குகிறது. வெயில் கொளுத்தி எடுக்கும் காலத்துக்கு ‘அக்னி நட்சத்திரம்’ என்று பெயர் வர இதுவே காரணம். அக்னி நட்சத்திரத்தை முன் ஏழு, பின் ஏழு என 2 பிரிவாக பிரித்து கூறுகிறது ஜோதிட சாஸ்திரம்.
நமது கலாசாரப்படி, ஆடி மாதத்தில் புதுமண தம்பதிக்கு ஆடி சீர் வைப்பது வழக்கம். சீர் வைத்து புதுப்பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து சென்று விடுவார்கள். ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை கடும் வெப்ப காலம் என்பதால் வியர்வை, புழுக்கத்தால் குழந்தையும் பெற்றெடுத்த தாயும் மிக சிரமப்படுவார்கள். மேலும், கடும் வெயில் காலம் என்பதால் அவர்களுக்கு உடல் உபாதைகள், நோய் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். இதை தவிர்க்கும் நோக்கிலேயே, ஆடியில் பெண்கள் கருத்தரிப்பதை தவிர்ப்பதற்காக தம்பதிகளை பிரித்து வைக்கும் வழக்கம் உருவானது.
கடும் வெப்பம் நிலவும் காலம் என்பதால், அக்னி நட்சத்திர காலம் தோஷ காலமாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் நல்ல காரியங்கள் செய்யலாமா என்ற சந்தேகம் எல்லாருக்கும் உண்டு. அக்னி நட்சத்திர காலத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், உபநயனம் ஆகியவை செய்வதில் எந்த தவறும் இல்லை. சுப விசேஷங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.
முடி இறக்குதல், காது குத்துதல், புது வீட்டுக்கு குடிபோய் பால் காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் செய்தல், பூமி பூஜை செய்வது, கிணறு வெட்டுதல் போன்ற விவசாய வேலைகளை தொடங்குவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
இந்த ஆண்டில் அக்னி நட்சத்திரம் மே 4&ம் தேதி (நாளை மறுநாள்) வெள்ளிக்கிழமை காலை 8.43&க்கு தொடங்கி மே 28&ம் தேதி திங்கள்கிழமை மதியம் 2.46 வரை உள்ளது. மே 11&ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.23 முதல் மே 25&ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 4.50 வரை உச்சபட்ச வெயில் நிலவும் கத்திரி வெயில் காலமாகும். அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்த பிறகு, எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும். இதை அக்னி கழிவு என்று கொண்டாடுவார்கள்.
- ‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிருகசீரிடம் நட்சத்திரமா! பெருமைப்படுங்க உங்களைப் பற்றி!
» வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி
» புதிய கத்திரி பயிர்
» கத்திரி வெயிலுக்கான 12 போற்றிகள்! கத்திரி வெயிலுக்கான 12 போற்றிகள்!
» இயற்கை முறை கத்திரி சாகுபடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum