வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி
Page 1 of 1
வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி
கோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
- நெல், கரும்பு மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களின் உற்பத்திக்கு பெயர் போன
கோபி பகுதியில், ஐந்து ஆண்டுகளாக மாற்றுப்பயிர்களை விவசாயிகள் பயிரிடத்
துவங்கியுள்ளனர். - உரம் விலை பல மடங்கு உயர்வு, விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல்
சாகுபடியும், சரியான விலை கிடைக்காததாலும், குறித்த காலத்தில் கரும்பு
வெட்டாததால் கரும்பு சாகுபடியும், நிரந்தர விலை இல்லாததால் மஞ்சள்
சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டுக்கு குறைந்து வருகிறது. - இதனால், குறுகிய காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய தோட்டக்கலை பயிர்களை
கோபி விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, கத்திரிக்காய்,
முள்ளங்கி, வெண்டைக்காய், புடலை, மக்காச்சோளம், சேனை கிழங்கு, சாம்பாரில்
பயன்படுத்தப்படும் வெள்ளை பூசணி, பொரியலில் பயன்படுத்தப்படும் சர்க்கரை
பூசணி ஆகியவை அதிகம் பயிராகிறது. - 90 முதல் 120 நாட்களில் அறுவடைக்கு வரும் கத்திரி, பயிரிடுவதன் மூலம்
இரண்டு முதல் ஐந்து டன் வரை கத்தரி கிடைக்கும். 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம்
ரூபாய் வரை லாபம் கிடைக்கும். - பனிக்காலத்தில் கத்திரி செடியில் பூக்கள் அழுகி விடும்; உற்பத்தி குறைவாக இருக்கும்
- வாழையில் கத்திரி ஊடுபயிராக பயிரிட்டுள்ளதால், கோடை வெயிலிலும் சீராக பூ பூப்பதால் விளைச்சல் நன்றாக உள்ளது.
- ஒரு ஏக்கர் வாழையில் ஊடுபயிராக கத்தரி பயிரிட்டால், இரண்டு முதல் ஐந்து டன் கத்திரி விளைச்சலாகும்.
- செலவு போக, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அனைத்து
வகையான பயிர்களிலும் ஏதேனும் ஒரு வகையாக தோட்டக்கலை பயிர் ஊடுபயிர்
செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட லாபம்
கிடைக்கிறது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி
» வாழையில் ஊடுபயிராக கொத்தவரை சாகுபடி
» வாழையில் ஊடுபயிராக இஞ்சி
» வாழையில் ஊடுபயிராக வெள்ளரி
» வாழையில் ஊடுபயிராக இஞ்சி
» வாழையில் ஊடுபயிராக கொத்தவரை சாகுபடி
» வாழையில் ஊடுபயிராக இஞ்சி
» வாழையில் ஊடுபயிராக வெள்ளரி
» வாழையில் ஊடுபயிராக இஞ்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum