பெரியபாளையம் பவானியம்மன் கோயில் ஆடி திருவிழா துவக்கம்
Page 1 of 1

ஊத்துக்கோட்டை: பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற பவானியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். 10 வாரம் நடக்கும் ஆடி திருவிழா 16ம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனிக்கிழமைகளில் திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள்.
கிராமங்களில் இருந்து கார், வேன், மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வரும் பக்தர்கள் கோயிலில் தங்கி ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, அம்மனுக்கு முடி காணிக்கை செலுத்தி, உடம்பில் வேப்பிலை கட்டி கோயிலை சுற்றி வருவார்கள். ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். நாளை ஆடி முதல் வெள்ளிகிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்து கோயிலுக்கு பாதயாத்திரை வருவார்கள்.
இதையொட்டி வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் சென்னை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, திருவள்ளூரில் இருந்து சிறப்பு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு சிறப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை டிஎஸ்பி பாரதி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெரியபாளையம் கோயில்
» குருவாயூர் கிருஷ்ணன்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
» திருச்செந்தூரில் பிப்.16-ல் மாசி திருவிழா துவக்கம்
» பழநியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum