தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணங்குடி

Go down

 பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணங்குடி Empty பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணங்குடி

Post  ishwarya Sat Feb 16, 2013 5:01 pm

‘ஸ்ரீமத் பாகவதம் எனும் நூலானது எழுத்துக்களால் கோர்க்கப்பட்டதன்று. அந்த எழுத்துக்களின் வடிவிலே நானே அந்நூலுக்குள் உறைகிறேன்’’ என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முத்திரை வாக்காக உரைத்தார். அது போலவே கிருஷ்ணர், ‘‘சில தலங்கள் எனக்கு மிகவும் பிரியமானவை. அவற்றுள் நான் எப்போதும் என் பக்தர்களுடன், அவர்கள் உணர்ந்தாலும் உணராவிட்டாலும் அவர்களுடனேயே சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இதை பிரம்ம புராணமும் உறுதிப்படுத்துகிறது. அவ்வாறு நித்திய நிரந்தரமாக பகவான் உறையும், உலவும் தலங்கள் பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்றழைக்கப்படுகின்றன.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணை, காடாகப் பரவியிருக்கும் தலங்களாதலால், கிருஷ்ணாரண்யம் என்றும் பெயர் பெற்றிருக்கிறது. இந்த தலங்களில் மூலவராகவோ உற்சவராகவோ கிருஷ்ணர் கோயில் கொண்டிருப்பார்; அல்லது கிருஷ்ணரின் லீலைகள் நிகழ்ந்த தலமாகவாவது இருக்கும். ஆழ்வார்களும் ரிஷிகளும் இந்த தலங்களில்தான் கிருஷ்ண தரிசனம் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஐந்து தலங்களாக, தமிழ்நாட்டில் திருக்கோவலூர், திருக்கபிஸ்தலம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம் ஆகியவை விளங்குகின்றன. அவற்றை ஒவ்வொன்றாக தரிசிப்போம். வசிஷ்டர் வெண்ணையினால் கிருஷ்ணனை செய்தார். வெண்ணெயை விட வேகமாக அவரின் மனம் கிருஷ்ண பக்தியில் உருகியது.

இவரின் பக்தியை விட கிருஷ்ணனின் கருணை அதிவேகம் கொண்டது. கிருஷ்ணன், குழந்தை கோபாலனாக வடிவம் கொண்டான். குடுகுடுவென்று ஓடிவந்தான். வசிஷ்டர் பூஜிக்கும் வெண்ணையை கையில் ஏந்தி வாயிலிட்டு விழுங்கினான். வசிஷ்டர், ‘‘அடேய், அடேய்...’’ என்று குழந்தையை விரட்டினார். குழந்தை கிருஷ்ணாரண்யம் எனப்படும் அடர்ந்த காட்டுப் பகுதியான திருக்கண்ணங்குடிக்குள் ஓடியது. கானகத்திற்குள் கிருஷ்ண தியானத்திலிருக்கும் ரிஷிகள் கண்ணன் ஓடிவருவதை அறிந்தனர். தொலைதூரம் வரும் கோபாலனை நோக்கி ஓடினர். பக்தியால் பொங்கி வழியும் அவர்கள் உள்ளம் கண்ட கண்ணன் உருகினான். ஓரிடத்தில் நின்றான். ‘‘என்னை வசிஷ்டர் துரத்தி வருகிறார். வேண்டிய வரத்தை சீக்கிரம் கேளுங்கள்’’ என்றான் குழந்தைக் கண்ணன்.

‘‘உன்னிடம் வேறென்ன கேட்பது கண்ணா? இப்படி உன்னைக் காணத்தானே இத்தனை காலம் இங்கு தவமியற்றுகிறோம். அதனால், இவ்விடத்திலேயே நிரந்தரமாக எப்போதும் காட்சியருள வேண்டும்’’ என்று வேண்டிக்கொண்டனர். அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் அங்கு மூச்சிறைக்க வந்த வசிஷ்டர், தடேரென்று கிருஷ்ணனின் பாதாரவிந்தத்தில் சரிந்தார். மகரிஷி தொழுததாலேயே அவ்விடம் சட்டென்று தேஜோமயமாக ஜொலித்தது. ராஜகோபுரங்களும் விமானங்களும் தானாகத் தோன்றின. பிரம்மனும் தேவர்களும் ரிஷிகளும் வந்து குவிந்தனர். பிரம்மா பிரம்மோத்ஸவம் நடத்தி எம்பெருமானை வழிபட்டார். இப்படி கண்ணன் கட்டுண்டு குடியமர்ந்ததால் கண்ணங்குடியாயிற்று. உயர்வு நவிர்ச்சியில், திருக்கண்ணங்குடி.

மூலவர் லோகநாதர், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். தாயார், லோகநாயகி. உற்சவர்கள், தாமோதர நாராயணன், அரவிந்தநாயகி எனும் திருப்பெயர்களோடு காட்சியளிக்கின்றனர். தாமோதரன், கோபாலனாக இடுப்பில் கைவைத்து நின்று காட்டும் அழகுக்கு ஈடில்லை. இத்தலத்தின் கல்லிலும் மண்ணிலும்கூட கிருஷ்ண சாந்நித்யம் நிரம்பியிருக்கின்றன என்பார்கள். இத்தலம் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில், ஆழியூர் பள்ளிவாசலுக்கு தெற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பொது வாகன வசதியற்ற இத்தலத்திற்கு தனி வாகனம் மூலம்தான் செல்ல முடியும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum