தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணமங்கை

Go down

பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணமங்கை Empty பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணமங்கை

Post  ishwarya Sat Feb 16, 2013 4:56 pm

கிருஷ்ணாரண்யம் எனும் புண்ணிய பிரதேசத்திற்குள் அமைந்திருக்கிறது இந்தத் தலம். ஆதியில் பிருகு முனிவருக்கு மகளாக அவதரித்தாள் திருமகள். அதுவும் திருப்பாற்கடலில் தோன்றியதுபோல் இத்தலத்தின் திருக்குளத்தில் தோன்றிய பிராட்டியை பார்க்க எல்லா தேவர்களும் கூடினார்கள். ஸ்தோத்திரங்கள் கூறி தொழுதார்கள். ஐராவதம் தங்கக் கலசத்தில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்தது. அத்தீர்த்தம் இத்திருக்குளத்திலும் பரவியது. அதனாலேயே தாயார் அபிஷேகவல்லி எனும் திருநாமம் பூண்டாள். கிருஷ்ண மங்கா என்றே பிருகு மகரிஷி அழைத்தார். அதுவே திருக்கண்ணமங்கை என்றாகி, தாயாரின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.

‘தன் மகளை பகவானுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டுமே, எப்படி வருவாரோ’ என்று பிருகு அவ்வப்போது கவலையோடு இருப்பார். பகவான் பக்தவத்சலன் எனும் திவ்யமான நாமத்தோடு வந்து கிருஷ்ண மங்கையை கரம் பிடித்தார். மங்களமான திருமகள் இங்கு மங்களமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். லட்சுமி தவமியற்றியதால் லட்சுமி வனம் என்றும் திருமணம் நடைபெற்றதால் கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது. திருமணத்தைக் காண தேவர்கள் குவிந்ததோடு எப்போதும் இக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டுமென தேனீக்களாக உருவெடுத்து கூடு கட்டி அதிலிருந்தபடியே பார்த்து மகிழ்கிறார்கள். இன்றும் தாயார் சந்நதியின் வடபுறத்திலுள்ள மதிலின் சாளரத்திற்கு அருகில் தேன் கூடு உள்ளது.

திருமங்கையாழ்வார் ஒன்பது பாசுரங்களை இத்தலத்தில் சாதித்துவிட்டு, ‘‘புரிகிறதா?’’ என்று பெருமாளையே கேட்கிறார். ‘‘என்ன அர்த்தம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார், பெருமாள். திருமங்கையாழ்வார் தன்னுடைய பத்தாவது பாசுரத்தில், ‘‘மெய்மை சொல்லில் வெண் சங்க மொன்றேந்திய கண்ண, நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே’’ என்கிறார். அதாவது, ‘‘கண்ணா, வெண் சங்கத்தை ஏந்திக் கொண்டு, சர்வ வியாபியாக இருக்கும் நீயே ஆலோசித்துக் கொண்டிருக்கிறாயே! பரவாயில்லை. புரிந்து கொள்ள வேண்டுமெனில் அடியேனிடத்தில் சிஷ்யனாக வாரும்’’என்றே அழைத்து விட்டார்.

உடனே, எம்பெருமானுக்கு திருமங்கையாழ்வாரின் பாடல்களை கற்க பேராவல் பொங்கியது. இதற்காகவே பெரியவாச்சான் பிள்ளை என்கிற மேதாவியாக அவதாரம் செய்தார். இவருக்கு கற்றுக் கொடுப்பதற்காக திருமங்கையாழ்வாரே நம்பிள்ளையாகவும் அவதரித்தார். ஆவணி மாத ரோகிணியில்தான் கண்ணபிரான் அவதரித்தான். அதே ரோகிணி நட்சத்திரத்தில் பெருமாள், பாடம் கேட்கும் பொருட்டு பெரிய வாச்சான் பிள்ளையாக அவதரித்தார். இவருக்கு பால பிராயத்தில் கிருஷ்ணன் எனும் திருநாமமும் உண்டு.

அதேபோல் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்த திருமங்கையாழ்வார், அதே கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையாக அவதரித்தார். என்னவொரு பொருத்தம்! பக்தவத்சலப் பெருமாள், கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பிரமாண்டமான பேரழகு பொருந்திய திருவுருவம். தாயாருக்கு கண்ணமங்கை நாயகி என்று திருப்பெயர். சிவபெருமான் நான்கு உருவமெடுத்து இத்தலத்து நான்கு திக்குகளையும் காத்து வருவதாக ஐதீகமுண்டு. திருவாரூரிலிருந்து வடமேற்கே 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum