தி.மலை கிரிவல மலையில் பிராயசித்த அபிஷேகம்
Page 1 of 1

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல மலையில் நேற்று பிராயசித்த அபிஷேகம் நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவின் உச்சக்கட்ட நிகழ்வான மகா தீபத் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. இதில் நாடு முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனம் செய்தனர்.
மகாதீபம் தொடர்ந்து கடந்த 7ம் தேதி வரை 11 நாட்கள் மலையில் பிரகாசித்தது. இந்த மகாதீபத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறிச்சென்று தரிசித்தனர். மலையையே சிவனாக பக்தர்கள் வணங்குவதால் ஒவ்வொரு ஆண்டும் தீபவிழா முடிந்ததும் கோயில் நிர்வாகம் சார்பில் மலை மீது பிராயசித்த அபிஷேகம் நடத்துவது வழக்கம். அதன்படி, நேற்று அண்ணாமலையார் கோயிலில் இருந்து யாக பூஜை செய்து, எடுத்து வரப்பட்ட புனித நீர் மலை மீது
தெளித்து அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தி.மலையில் கார்த்திகை : மலையில் மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய் தயார்
» தி.மலையில் கார்த்திகை உற்சவம் : நாளை மகா தீபம் ஏற்றப்படுகிறது
» குரு மலையில் அருளும் தவசி தம்பிரான் சுவாமிகளின் சமாதி
» தி.மலையில் இன்று அதிகாலை பரணி தீபம் : பக்தர்கள் பரவசம்
» திருவண்ணாமலை கிரிவல வரைபடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum