நினைத்ததை நடத்தி வைப்பாள் மாரியம்மன்
Page 1 of 1
நினைத்ததை நடத்தி வைப்பாள் மாரியம்மன்
இளஞ்சாவூர் எனும் தலம் செந்நெல் வயல்கள், சீர்மிகு கண்மாய் சூழ்ந்த இயற்கை எழில் சூழ் தலமாகும். ஊரின் நடுநாயகமாக இளஞ்சாவூர் மாரி யம்மன் அருள்பாலித்து வருகின்றாள். சக்தி வழிபாட்டை சாக்தம் என அழைத்தார் ஆதிசங்கரர். சக்தி வழிபாட்டின் விரிவாக்கமே மாரியம்மனின் வழிபாடு ஆகும். கிராம தேவதை வழிபாடே படிப்படியாக வளர்ந்து மாரியம்மனுக்கென்று பெரியளவில் கோயிலில் விழாவாக நடத்தப்படுகிறது. சுமங்கலிப் பெண்களை வழிபடும் மரபே கிராம தேவதை வழிபாடாக வெளிப்பட்டது என்றும் கூறுவார்கள். சக்தி வழிபாடு இவ்வாறு பல பரிமாணங்களைக் கொண்டது; ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது. அந்த வகையில் இந்த தலத்தில் ஆண்டுதோறும் மாரியம்மன் ஆலயத்தில் நிகழும் பூச்சொரியல் விழாவை தேசிய ஒருமைப்பாடு விழா என்றே கூற வேண்டும். ஜாதி, மத பேதமில்லாமல் அனைவரும் பங்கு கொள்வார்கள். மாரியம்மன் வழிபாடு இயற்கையைப் போற்றும் வழிபாடாகும்.
மாரி என்றால் மழை என்றே பொருள். மாரியம்மனை வழிபாடு செய்தால் மழை பொழியும். மாரியம்மனுக்கு நடைபெறும் பூச்சொரியல் விழா, பொங்கல் விழா, தேரோட்ட விழா போன்றவையும், கிராமியக் கலைகளான கிராமிய மேடை நாடகங்கள், கிராமிய இசை நிகழ்ச்சிகள், கரகாட்டம் போன்றவற்றையும் இவ்வூர் மக்கள் பாரம்பரியமாக பாதுகாத்து வருகிறார்கள். திருமயம் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த 18 பட்டி மக்களும் சேர்ந்து பக்தியுடன் வழிபாடும் செய்யும் தலம் இது. இங்கு நடைபெறும் பொங்கல் விழா வித்தி யாசமானது. மாரியம்மன் வேடம் பூண்ட பூசாரி ஒருவர், பக்தியுடன் கரகம் சுமந்து, கிராமிய இன்னிசை முழங்கிட, திருமயம் நகரிலிருந்து இளஞ்சாவூர் மாரியம்மன் ஆலயத்துக்குக் கொண்டு செல்வார்.
அப்படியே ஆவேசத்தோடு இளஞ்சாவூர் ஆலயக் கருவறையில் தான் சுமந்து வந்த கரகமாகிய குட த்தை இறக்கி வைப்பார். அப்போது ஓர் கூரிய கத்தியைக் குடத்து விளிம்பில் நிறுத்தி வைப்பார். அந்தக் கூரிய கத்தி, குடத்து விளிம்பில் ஆடாமல், அசையாமல் நிற்கும். இவ்வாறு கூரிய கத்தி குடத்து விளிம்பில் நின்றால் அந்த ஆண்டு திருமயம் பகுதியில் கனமழை பொழியும். இந்த அபூர்வ நிகழ்வைக் கண்டு வழிபட பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இளஞ்சாவூர் மாரியம்மன் பக்தர்களுக்கு வரப் பிரசாதியாகத் திகழ்கிறாள். பொங்கல் விழாவில் அம்மனின் ஆலய வளாகத்தில் தம் குழந்தைகளை க ரும்புத் தொட்டிலில் வைத்து, பக்தர்கள் வலம் வரும் காட்சியும் உண்டு.
இவ்வாறு செய்தால் குழந்தைகளை நோய் நொடிகள் அணுகாதாம். பொது வாக அம்மை நோயும் நீங்கப் பெறுவர். இவளை வேண்டிக் கொண்டால் கேட்டது கிடைக்கும், நினைத்ததை நடத்தி வைப்பாள் என்று கூட்டம் கூட்ட மாக மக்கள் வந்த வண்ணம் இருப்பர். ஜப்பானியப் பல்கலைக்கழக ஜப்பான் மாணவி ஒருவர், ஓராண்டு காலம் தங்கியிருந்து இளஞ்சாவூர் முத்துமாரி யம்மனை குறித்து மிகப் பெரிய ஆய்வை மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க தகவல். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு அருகிலேயே இத்தலம் அமைந்துள்ளது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நினைத்ததை நடத்தி வைக்கும் யந்திரங்கள்
» நினைத்ததை நிறைவேற்றும் மந்திரங்கள்
» நினைத்ததை நிறைவேற்றும் கடுவெளிச் சித்தர்!
» நினைத்ததை நிறைவேற்றும் காரியசித்தி மந்திரங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum