தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நினைத்ததை நிறைவேற்றும் கடுவெளிச் சித்தர்!

Go down

நினைத்ததை நிறைவேற்றும் கடுவெளிச் சித்தர்! Empty நினைத்ததை நிறைவேற்றும் கடுவெளிச் சித்தர்!

Post  meenu Fri Mar 08, 2013 1:34 pm

கடுவெளிச் சித்தராலத்தூர்

கடுவெளியில் கோயில் கொண்டிருக்கும் இறைவனையும் இறைவியையும் வழிபட்டு கடுவெளிச் சித்தர் நிகழ்த்திய சித்துகள் எண்ணிலடங்காது. மக்களின் மனப் பிணியையும் உடல் பிணியையும் நீக்கிய நிகழ்ச்சிகள் அநேகம்! அதற்கு முன்பு கடுவெளிச் சித்தரைப் பற்றி கொஞ்சம் பார்ப்போமா!

‘‘நந்தவனத்திலோர் ஆண்டி- அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!’’

-இந்தப் பிரபலமான பாடல் பலருக்கும் அறிமுகமானது. அதை இயற்றியவர் இந்த கடுவெளிச் சித்தர்தான்! அதென்ன கடுவெளி? ‘வெளி’ என்றால் வெளியிடம். ‘கடுவெளி’ என்றால் எல்லையில்லாமல் விரிந்து பரந்த பிரபஞ்சப் பெருவெளியாகும். தமது கருத்துகளில், பாடல்களில், கடுவெளியைப் பற்றி அதிகம் புலப்படுத்தியதாலேயே அந்தச் சித்தர் ‘கடுவெளிச் சித்தர்’ என்றும் அடையாளப் பெயரால் அழைக்கப்படுகிறார். கி.பி. பதினாறாம் நூற்றாண்டுதான் கடுவெளிச் சித்தர் அவதரித்த காலம் என்கிறார்கள். இந்தக் காலப் பெருவெளியில் அவருடைய தத்துவங்களும் உபதேசங்களும் இன்னும் அழியவில்லை. ‘கடவுள்’ என்பதே கடந்தும் உள்ளிருப்பதுமான இறை நிலை, ‘இகம்’ என்றால் உள்ளே. ‘பரம்’ என்றால் வெளியே.

உள்ளும் புறமும் ஒருமிக்கும் சக்தியே உலவுகிறது. அண்டத்தில் இருப்பதுதான் பிண்டத்திலும் ஊடுருவுகிறது. ஆகவே பரமாத்மாவுடன் ஜீவாத்மாவை உகந்தவாறு ஒன்றிணைத்து உலகுய்யப் பயன்பெறுவதே ஞானப் பெருநிலை! திருமறைக்காடு என்கிற வேதாரண்யத்தில் கடுவெளிச் சித்தர் சிவபெருமானைத் துதித்து உள்ளமுருகப் பாடி வழிபட்டார். அப்போது அவருடைய மெய் யன்புமிகு பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், தம்முடைய பேரன்புப் பெருக்கை அதிசயமாக வெளிப்படுத்தும் வண்ணம் கடுவெளியில் உள்ள சிவலிங்கத்தை இரண்டாகப் பிளக்க வைத்தாராம்! இந்தத் தத்துவத்தை விளக்கும் ஒரு ‘திருமந்திர’ப் பாடல்:

‘‘வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி ஆகுமே!’’

சிவலிங்கம் பிளவுபட்டு அதிலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டுத் தோன்றியதாக பல புராணங்களில் பார்த்திருக்கிறோம். கடுவெளிச் சித்தரை மகிழ் விக்க இறைவன் வெளிப்பட்டதும் அவ்விதமாகத்தான் இருக்க வேண்டும். கல் போன்று இறுகியிருக்கும் மனதையும் இளக்கினால், இருளை விலக்கினால், அதனுள் ஞானப் பிரகாசப் பெருவெளி புலப்படும் என்பதை உணர்த் துவதே, கல்லையும் பிளந்து கடுவெளியைக் காட்டிய தத்துவமாகும்!

‘‘எட்டும் இரண்டையும் ஒர்ந்து மறை
எல்லாம் உனக்குள்ளே ஏகமாய்த் தேர்ந்து
வெட்டவெளியினைச் சார்ந்து ஆனந்த
வெள்ளத்தில் மூழ்கு மிகுகளி கூர்ந்து’’

-என்று பாடுகிறார், கடுவெளிச் சித்தர். ‘‘எண்சாண் உடம்பையும் உள்ளும் வெளியும் இயங்கும் மூச்சையும் உணர்ந்தால், ஒழுங்குபட இயக்கினால் அது அனைத்து வேதங்களையும் அறிந்து தேர்வதற்கு ஒப்பாகும். வெட்டவெளியாய் வெளியும் உள்ளும் நிலவும் இறையொளியை சேர்ந்தால், துன்பமில்லா இன்பப் பெருவெள்ளத்தில் மூழ்கி மிகுந்த மகிழ்ச்சியை அடையலாம் என்பது இப்பாடலின் கருத்து. இத்தகைய அற்புதப் போற்றல் கொண்ட கடுவெளிச் சித்தரின் சித்தம் அறிய முயல்வோம். ‘சித்தம்’ என்றால் மனம். அனைவருக்கும்தான் மனம் இ ருக்கிறது. அது அலை நுரையாகவும் அல்லாடுகிறது. கிளை குரங்காகவும் தாவுகிறது. கடிவாளமில்லாக் குதிரையாகவும் கட்டுமீறி ஓடுகிறது.

இலக்கில்லாமல் சித்தம் அலையும் வீண் பயணமாகவே இவ்வுலக வாழ்வும் இடைவழியில் நின்று போய் விடுகிறது. அந்தச் சித்தம் அடங்கினால்தான் தெளியும். தெளிந்தால்தான் தேரும். தேர்ந்தால்தான் ஓரும். ஓர்ந்தால்தான் உணரும். உணர்ந்தால்தான் ஒடுங்கும். ஒடுங்கினால்தான் ஆழும். ஆழ்ந்தால்தான் விளங்கும். விளங்கினால்தான் ‘இகம்’ என்னும் உள்ளேயும் ‘பரம்’ என்னும் வெளியேயும் நீக்கமற நின்று நிலவும் தூய இறையொளி துலங்கும்! எனவே, ‘‘மெய்ஞ்ஞானப் பாதையில் ஏறும் சுத்த வேதாந்த வெட்டவெளியினைத் தேறு!’’ என்று கடுவெளிச் சித்தர் உரைத்ததை உணர்வோம். கடுவெளிச் சித்தரின் பாடல்களில் மேற்கண்ட உயரிய மெய்ப்பொருள் உயிர்மூச்சாக உலவுகிறது. வெட்ட வெளியிலும் கிட்டும் உடலிலும் ஒட்டும் உற வாக அவர் நடத்திய ஞானப் பயணங்கள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன!

கடுவெளிச் சித்தர் வழிபட்டு வந்த இறைவன் பரமானந்தநாதர் என்னும் திருநாமம் தாங்கிய சிவலிங்கப் பெருமான். ‘பரம்’ என்றால் ‘வெளி’ எனப் பார்த்தோம். பிரபஞ்ச வெளியெங்கும் பரவியிருக்கும் ஆனந்த மயமாகிய இறைவனை, பரமானந்தரை, வெட்ட வெளி விஞ்ஞானியாகிய கடுவெளிச் சித் தர் வழிபட்டு வந்தார். தேவியின் திருப்பெயர் வாலாம்பிகை என்பதாகும். அன்னை பராசக்தியின் அரிய பல நிலைகளில் ‘வாலை’ எனப்படும் வாலாம்பிகையின் திருவடிவும் ஒன்று. அற்புதங்கள் புரியும் சித்தர்கள், பெரும்பா லும் வாலை எனப்படும் இளங்கன்னியாகவே சக்திதேவியை பாவித்து உபாசித்து வந்திருக்கின்றனர். பல நூற்றாண்டுகளாகவே பக்தர் பெருமக்கள் கடு வெளி பரமநாதர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டு பயனடைந்திருக்கிறார்கள்.

ஆனால் காலப்போக்கில் பழுதுபட்டுக் கொண்டே வந்த அக்கோயில் மேலும் சிதிலமடைந்தது, இப்போது இடிபாடுகளும் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் பரமநாதர் ஆலயம் கட்டுவதற்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. இப் போதும் அவ்விடத்திற்குக் கிழக்கே சித்தி விநாயகர் கோயிலைத் தரிசிக்கலாம். மேற்கு நோக்கிய சந்நதி. பின்னால் ஆலயத் தீர்த்தமாக சிவலிங்கத்தடி திருக்குளம், கரையில், விநாயகர் கோயிலையடுத்து, அரச மரங்களும் வேப்ப மரங்களும் இரண்டிரண்டாக இணைந்து நிற்கின்றன! அமைதியான அ ருள் பரவி தென்றலாய் வீசுகிறது. இன்றும் கடுவெளிச் சித்தராலத்தூர் என்ற இந்த ஊருக்கு பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து வெட்ட வெளியில் அமர்ந்து, கடுவெளிச் சித்தரைத் தியானித்து, தங்கள் குறைகளும், சங்கடங்களும் நீங்கிச் செல்கிறார்கள்.

செல்வமும் சிறப்பும் மதிப்பும் சிறந்தோங்க மக்கள் மகிழ்வுப் பெருக்கோடு வந்து வணங்கிச் செல்கிறார்கள். இவ்வாறான அரிய சக்தியும் அருள் ஒளியும் நிலை கொண்டுள்ள இடத்தில் மீண்டும் பரமநா தர் ஆலயம் எழுப்பப்படவும் கடுவெளிச் சித்தர் தியான பீடம் அமைக்கப்படவும் ஆன்மிக ஆர்வலர்கள், ஊர்ப் பொதுமக்கள் என பலரும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆலயத் தொடர்புக்கு: 9942227001, 9442221918. இத்தலம் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை நெடுஞ்சாலையிலுள்ள எடையூரிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum