தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராசி மண்டலத்துக்குக் கீழே அரசாட்சி

Go down

ராசி மண்டலத்துக்குக் கீழே அரசாட்சி Empty ராசி மண்டலத்துக்குக் கீழே அரசாட்சி

Post  ishwarya Sat Feb 16, 2013 12:44 pm

அரியலூரிலிருந்து 22 கி.மீ. தொலைவில், முட்டுவாஞ்சேரி-திருபுரந்தான் சாலையில் உள்ள விக்கிரமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது, பூரண சந்திர கலாம்பிகை சமேத சோழீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலய ஸ்தலவிருட்சம், வில்வ மரம். தீர்த்தம், கங்கா தீர்த்தம். இத்தலத்தில் சனீஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியனுக்குத் தனித்தனி சந்நதிகள் உள்ளன. ராசி மண்டல சிற்பங்களும் இருப்பது கூடுதல் சிறப்பு. இத்திருக்கோயில் கி.பி.1012-1044ல் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப்பட்டது. சோழர்கள் ஆட்சி செழிக்க அருளியதால் இங்குள்ள இறை வன் சோழீஸ்வரர் ஆனார். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் 1912ம் ஆண்டு கும்பாபிஷேகம் கண்டதோடு சரி. கோயிலின் மதில் சுவருக்கு வடபுறம் பிரம்மாவுக்கு கோயில் அமைந்துள்ளது. இந்த ஊரில் சமணர்கள் வாழ்ந்ததற்கு ஆதாரமாக புத்தர் சிலையும் காணக் கிடைக்கிறது.

தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரம் செல்ல, கீழப்பழுவூர்-விக்கிரமங்கலம்-திருபுரந்தான் வழியை பயன்படுத்தியிருக்கிறார்கள். விக்கிரம சோழபுரம் பெரிய வணிக நகரமாக திகழ்ந்துள்ளது. இந்த ஊருக்கு அருகில் முத்து வணிகம் நடைபெற்ற இடம் முட்டுவாஞ்சேரியும் போர்க் கருவிகள் தயாரிக்கும் இடம் உலைகள மேடு எனவும் திகழ்ந்துள்ளன. வணிக செட்டியார்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று அடையாளமும் உள்ளன. இங்கு வாழ்ந்த செட்டியார்கள் சோழபுரத்து செட்டியார்கள் என அறியப்பட்டு இன்றும் பல ஊர்களிலும் வணிகம் செய்து வருகின்றனர்.

ஒருமுறை தனக்கு ஏற்பட்ட ஏழரை சனியின் உக்கிரம் குறைய இக்கோயிலில் சனிபகவானுக்கு என தனி சந்நதி அமைத்தார், ராஜேந்திர சோழன். கோயிலின் முன்புறம் கங்கா தீர்த்தத்தை அமைத்து அதில் புண்ணிய நீராடி சனீஸ்வரனை தினசரி அவர் பூஜித்து வந்திருக்கிறார். இங்குள்ள சனீஸ்வ ரர் சந்நதியில் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் அரளி, தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து எள்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சனியினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். தனது பகைவர்களை வெல்வதற்காக பைரவர் சந்நதி அமைத்து சோழ மன்னர்கள் பூஜித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் பகைவர்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்க, இத்தல பைரவரை மக்கள் வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.

மகா மண்டப மேல் விதானத்தில் ராசி மண்டல சிற்பங்கள் அமைந்துள்ளன. 12 ராசிக்குரிய ராசி சிற்பமும் அந்தந்த கிரக தெய்வங்களும் பொறிக்கப் பட்டுள்ளன. மத்தியில் சூரியனும் நவகிரகங்களின் மூர்த்தியான முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையோடு எழுந்தருளியுள்ளனர். அந்தந்த ராசிக்காரர் கள் தத்தமது ராசிக்கு கீழே நின்று அம்பாளையும் சோழீஸ்வரரையும் வழிபட்டால் அவரவர் ராசி தோஷங்கள் நிவர்த்தி அடையும்.

ராஜேந்திர சோழன் இந்த ராசி மண்டலத்துக்குக் கீழே அமர்ந்துதான் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறான். இத்தகவலை, கங்கை கொண்ட சோழபுரம், திருப்புலி வனம், அச்சிறுப்பாக்கம், பிரம்மதேசம், அய்யன்பேட்டை, ஆலங்குடி ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன. 100 வருடங்களுக்கு பிறகு, ஊர்ப் பொதுமக்களால் திருப்பணி செய்யப்பட்டு 1.2.2013 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு மேல் 10:15க்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 9626025266, 9786014888.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum