இதய அஞ்சலி
Page 1 of 1
இதய அஞ்சலி
ஆன்மிக எழுத்தாளர் ஸ்ரீ . ரா.கணபதி அவர்கள் கடந்த திங்கள் அன்று சென்னையில் காலமானார்கள்.
"நடமாடும் தெய்வம்" என போற்றப்பட்ட மறைந்த காஞ்சி பெரியவரின் உபதேச தொகுப்பான தெய்வத்தின் குரல் எனும் நூலினை எட்டு பாகங்களாக தொகுத்து உலகிற்கு அளித்த பெருமை இவரையே சாரும்.
அவரது எழுத்து நடை நம் உணர்வுகளை மேல் நிலைக்கு உயர்த்தும் ஆற்றல் உடையவை. எளிய நடையிலே உயர்ந்த ஆன்மிக கருத்துக்களை கூறுவதில் வல்லவர்.
மகான்களின் வரலாறுகளை எழுதும்போது , அந்த மகான்களின் காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்று , அவர்களுக்கு அருகிலேயே நம்மை அமரவைதுவிடும் ஆற்றல் அவரது எழுத்துக்கு உண்டு.
பத்திரிக்கைகளில் அவரது எழுத்து தொடராகவும் வெளி வந்துள்ளது. தன் தனிப்பட்ட வாழ்வினிலும் சிறந்த ஆன்மிகவாதியாக திகழ்ந்த அவர் , ப்ரம்ஹசாரியாகவே வாழ்ந்துள்ளார். அவர்களின் நெகிழ்ந்த இறை பணிக்கு சாட்சியாகவே, அவர்கள் சிவ ராத்திரி அன்று இறைவனடி சேர்ந்துள்ளர்கள்.
ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டிய அவரது ஒப்புயர்வற்ற படைப்புகளில் சில :
1 . தெய்வத்தின் குரல் - வானதி பதிப்பகம்
இது காஞ்சி மஹா பெரியவரின் உபதேச தொகுப்பு ஆகும்.
2 . அம்மா ( ஸ்ரீ சாரதா தேவியின் வாழ்க்கை சரிதம் ) - ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு
ஸ்ரீ இராமக்ருஷ்ணரின் துணைவியாரும், தூய அன்னையும் , பராசக்தியின் அவதாரமுமாகிய ஸ்ரீ சாரதா தேவியின் வாழ்க்கை சரிதம். ஒவ்வொரு இந்திய பெண்மணியும் அறிந்துக்கொள்ள வேண்டிய அற்புத சரித்திரம். அவரது சரிதம் படிக்கும்போதே நம்முள் பவித்திரமான உணர்வு கமழ்வதை உணர முடியும்.
3. அறிவுக்கனலே , அருட்புனலே - ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு
ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானதர் ஆகியோரின் இணைந்த வாழ்க்கை சரிதம்.
4. விவேகானந்தம் - ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு
சுவாமி விவேகானதரின் வாழ்க்கை சரிதம்
5. சுவாமி - ஸ்ரீ சத்யா சாய் பாபாவின் வாழ்க்கை சரிதம்
6. அன்பு வேணுமா அன்பு - வானதி பதிப்பகம்
7. காமாக்ஷி கடாக்ஷி - வானதி பதிப்பகம்
8. காமகோடி ராமகோடி - வானதி பதிப்பகம்
9. ஸ்ரீ ரமண மணம் (பாகம் I & II )
10. ஜய ஜய சங்கர - வானதி பதிப்பகம்
11. ஒரு புதிய சிவாநந்த லஹரி - வானதி பதிப்பகம்
இறைவனடி சேர்ந்த ஸ்ரீ.ரா.கணபதி அவர்களின் ஆன்ம சாந்திக்காக பக்தி யுகம் பிரார்த்திக்கின்றது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரீ அரவிந்த அஞ்சலி
» குர்து இன பெண் செயற்பாட்டாளர்களுக்கு அஞ்சலி
» மங்காத்தாவில் அஞ்சலி
» அஞ்சலி முத்திரை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum