வீட்டுத் தோட்டத்தை அழகாக்கும் கோடைகால மலர்கள்!
Page 1 of 1

Home Gardening Tips
வசந்த காலத்தில் மஞ்சள் நிறப்பூக்கள் எங்கெங்கும் பூத்து குலுங்கும். மஞ்சள் வர்ணம் மங்களகரமானது என்பதைப்போல மனதைக் கவர்ந்தவை. கோடை காலத்திற்கு ஏற்ற மஞ்சள் மலர்களை வீட்டுத் தோட்டங்களில் எளிதாக வளர்க்கலாம்.
சூரியகாந்தி பூக்கள்
சூரியகாந்தி பூக்கள் சூரியனின் காதலி என்று அழைக்கப்படுவை. சூரியன் செல்லும் திசை எங்கும் திரும்பி தங்களின் நேசத்தை வெளிப்படுத்தும். மஞ்சள் நிறப் பூவில் கருமையான விதைகள் மேட்சாக அமைந்து மனதை கவரும். இதை தோட்டத்தில் எளிதாக வளர்க்கலாம். ஆழமான குழி தோண்டி அதில் விதையை ஊன்றினால் செடிகள் வளரும். இதற்கு தினசரி தண்ணீர் ஊற்றத் தேவையில்லை. எளிதாக வடிகால் வசதி செய்லாம்.
செவ்வந்திப் பூக்கள்
செவ்வந்திப் பூக்கள், மஞ்சள், ஆரஞ்சு, செம்மை நிறங்களைக் கொண்டுள்ளன. கோடைப் பருவத்தில் இவை எளிதாக வளரும். சின்ன சின்ன டப்பாக்களிலும், கண்டெய்னர் மூலமும் வீட்டின் உள்புற தோட்டத்திலும் வளர்க்கலாம்.
பால்சம் பூக்கள்
பால்சம் பூக்கள் பாதை ஓரங்களில் அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகின்றன. இவை வருடாந்திர மலர்ச் செடிகள். இந்த தாவரத்தின் மலர்கள் வெள்ளை,பிங்க், ரோஸ், சிவப்பு வர்ணங்களில் சிறியதாய் பூத்திருக்கும். இவை கோடைகாலத்தின் மத்தியில் பூக்கும் என்பதால் வசந்த கால தொடக்கத்தில் இவை பயிரிடலாம்.
கிளாடியஸ் மலர்கள்
இந்த மலர்கள் நட்சத்திர வடிவத்தில் பார்க்கவே அழகாய் காணப்படும். பலவித வர்ணங்களில் இந்த பூக்கள் காணப்படும். கோடைகாலத்தில் பூக்கும் இந்த பூக்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், ப்ளூ என பல வர்ணங்களில் காணப்படும். வீட்டுத் தோட்டத்தில் இவற்றை பயிரிட்டு வளர்த்தால் கோடையின் வெம்மை கூட நம்மை தாக்காது.
கார்டீனியா மலர்கள்
அழகான நிறங்களை உடையை இலைகளையும், கிரீம் கலர் பூக்களையும் கொண்டவை கார்டீனியா பூக்கள். கோடைகாலத்தில் மாலை நேரத்தில் இவை பூத்துக்குலுங்கும். வீட்டுத்தோட்டத்தில் இந்த மலர் தாவரங்களை பயிரிட்டு வளர்க்கலாம். தோட்டம் அழகாய் மாறும்.
அதேபோல் கோடை காலத்தில் அழகூட்டும் வாடாமல்லி , ஹாலிஹாக், டேபிள் ரோஸ், கோழிக் கொண்டை போன்றவைகளையும் வளர்க்கலாம்.
இந்த கோடையில் நீங்களும் மலர்த்தோட்டம் போடுங்களேன் !

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடைகால சாலட்
» வீட்டுத் தோட்டத்தில் பப்பாளி மரம் வளர்க்கலாம்
» வீட்டுத் தோட்டங்களில் அலங்கார குத்துச் செடிகள்
» வீட்டுத் தோட்டத்தில் பசுமையான காய்கறி வளர்க்கலாம்
» மனதைக் கொள்ளை கொள்ளும் வீட்டுத் தோட்டங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum