மனதைக் கொள்ளை கொள்ளும் வீட்டுத் தோட்டங்கள்
Page 1 of 1

Gardening tips
காணி நிலத்தில் அழகாய் ஒரு வீடு. அந்த வீட்டின் முன்பு கண்ணிற்கு அழகாய் பசுமைத்தோட்டம். சிறியதாய் ஒரு கிணறு என சின்ன சின்ன கனவுகள் நடுத்தர வர்க்கத்தினருக்கு உண்டு. தோட்டம் அமைக்க பெரிய இடம்தான் வேண்டும் என்பதில்லை நம்முடைய வீட்டின் முன்பு சிறிய இடம் இருந்தாலே அதில் அழகாய் தோட்டம் போடலாம். உங்களது தேவைக்கேற்ப அந்த தோட்டத்தில் காய்கறி, பூச் செடிகள், அழகுக்கான செடிகள் என பல வகைச் சடிகளை வாங்கி வந்து நட்டு வைக்கலாம். பசுமைத் தோட்டம் அமைக்க பயனுள்ள ஆலோசனைகள்.
சரியான பருவம்
தோட்டம் போட சரியான பருவம் கோடைகாலமோ, குளிர்காலமோ ஏற்றதல்ல, வசந்த காலத்தில் அதாவது பிப்ரவரி மாதத்தின் மத்தியில் தொடங்கி மார்ச் இறுதிக்குள் தோட்டம் அமைக்க ஏற்ற பருவமாகும்.
மண்ணின் தன்மை
தோட்டம் அமைப்பதற்கு முன்பு, அப்பகுதிக்குள் கால்நடைகளோ, கோழி போன்றவையோ வந்து விடாமல் தடுக்கும் வேலி அமைப்பது மிகவும் முக்கியம். மண்ணின் தன்மையை அறிந்து அதற்கேற்ப செடிகளை தேர்வு செய்து அமைக்கவேண்டும். களிமண் என்றால் தோட்டம் அமைக்க ஏற்றது. செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் வேர் வரை ஊடுருவும். செடிகளை நடுவதற்கு முன்பு மக்கிய தொழு உரம் போட்டு மண்ணைக் கொத்திவிட்டு மண்ணை இளகச் செய்து வைத்திருங்கள்.
சூரிய ஒளி அவசியம்
தோட்டம் அமைக்கப்பட வேண்டிய இடம் சூரிய ஒளி படும் இடமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தோட்டத்தில் நேரடியாக சூரிய ஒளி படும் இடமாக பார்த்து, நிழல் எந்த அளவிற்கு விழும் என்பதை அறிந்தும் தாவரங்களை நடவு செய்யவேண்டும். அருகில் உள்ள நர்சரிகளுக்கு சென்று அங்குள்ள தரமான தாவரங்களை கண்டறிந்து அவர்கள் செடிகளை பராமரிக்கும் விதம் பற்றி தெரிந்து கொண்டு வரலாம். இது வீட்டுத் தோட்டம் அமைக்க உதவிகரமாக இருக்கும்.
கொடிகளுக்குப் பந்தல்
கொடி வகைகளை அதற்கான பந்தல் அமைத்து அதன் கீழே நடவு செய்யலாம். அல்லது முள் வேலி இருந்தால் அதன் மீது படரும் வகையில் கொடி வகைகளை நடவு செய்யலாம்.
தோட்டத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று வர போதுமான இடவெளி விட்டு செடிகளை நடுவது மிகவும் முக்கியம்.
செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் போது அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் தேங்காமல் எளிதாக வடிந்து செல்லும் அளவிற்கு வடிகால் வசதியுள்ள தொட்டிகளை தேர்வு செய்யலாம்.
அழகை அதிகரிக்கும்
சீசன் செடிகளை சரியாக பராமரிக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை அதற்கேற்ப கவனித்து உரமிடுவது அவசியம். இறந்துபோன தாவரங்களை அவ்வப்போது அகற்றிவிடவேண்டும்.
செடிகளுக்கு இயற்கையான மட்கிய இலை, தழைகளால் தயாரிக்கப்பட்ட உரங்களை போடலாம். தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே ஒரு பள்ளத்தைத் தோண்டி அந்த மண்ணைக் கொண்டு பாத்திகள் செய்து கொள்ளவும். பள்ளத்தில் வீட்டின் மக்கும் குப்பைகளைக் கொட்டி மக்கச் செய்து அதையே தோட்டத்திற்குப் பயன்படுத்தவும் வேலை தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே குப்பையை மக்கச் செய்வது மண்ணை வளப்படுத்தவும் உதவும்.
மரங்கள் அழகூட்டும்
வீட்டின் காம்பவுண்டு சுவருக்கு அருகில் செம்பருத்தி, போகன்வில்லா செடிகளை வளர்ப்பது வீட்டின் அழகை அதிகரிக்கும். தோட்டத்தின் ஓரத்தில் மா மரம், நெல்லிக்காய் மரம் போன்றவை நட்டு வைத்தால் மற்றச் செடிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களின் மனதைக் கொள்ளை கொள்ள விரும்பும் ஆண்களே உங்களுக்காக..!
» மனதை கொள்ளை கொள்ளும் லவ் பேர்ட்ஸ்
» துணிச்சலுடன் மனதைக் கட்டுங்க!
» துணிச்சலுடன் மனதைக் கட்டுங்க!
» மனதைக் கவரும் அரேபியக் கதைகள்
» மனதை கொள்ளை கொள்ளும் லவ் பேர்ட்ஸ்
» துணிச்சலுடன் மனதைக் கட்டுங்க!
» துணிச்சலுடன் மனதைக் கட்டுங்க!
» மனதைக் கவரும் அரேபியக் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum