வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் மணவாழ்க்கை
Page 1 of 1
வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் மணவாழ்க்கை
Anuskha
இன்றைய தலைமுறையினருக்கு திருமணம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறது. காரணம், திருமணத்திற்கு பிந்தைய குடும்ப உறவுகளை குறித்த அச்சம்தான். பேச்சிலர் வாழ்க்கையில் இருக்கும் சுகம், திருமண முடிந்த பின் கிடைக்காது என்பதினாலேயே பலரும் திருமணம் செய்து கொள்ள தயங்குகின்றனர். பெரும்பாலோனோர் லிவிங் டு கெதர் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் திருமணம் செய்து கொண்டு வாழ்வதுதான் பாதுகாப்பான வாழ்க்கை என்று அறிவுறுத்தியுள்ளனர் உளவியல் நிபுணர்கள்.
பாதுகாப்பான தாம்பத்ய உறவு
திருமணம் என்பது ஆண், பெண் இணைப்பிற்கான அங்கீகாரம். இதனால் பாதுகாப்பான உறவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஆன ஆத்மார்த்தமான இந்த உறவு பேச்சிலர் வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியாது. பேச்சிலர் வாழ்க்கையை விட திருமண வாழ்க்கையில் நூறு சதவிகிதம் பாதுகாப்பான உறவு கிடைக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
சந்ததிகள் உருவாகும்
திருமண வாழ்க்கையில் மற்றொரு அங்கீகாரம் குழந்தைகள். இது சந்ததியை தழைக்கச் செய்யும் உன்னத வாழ்க்கை. ஆனால் பேச்சிலராக இருப்பவர்கள் இது மாதிரியான மகிழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது.
உணர்வு ரீதியான உதவி
திருமணம் என்பது உணர்வு ரீதியான உறவுக்கான வடிகால். என் குடும்பம், என் வாழ்க்கை என்ற என்ற உணர்வு ஏற்படும். எந்த சந்தர்ப்பத்திலும் உன்னை கைவிட மாட்டேன் என்ற உறுதியோடு இணையும் கைகள்தான் இறுதிவரைக்கும் மகிழ்ச்சியோடு இணைபிரியாமல் இருக்கும். ஆனால் பிரம்மச்சாரி வாழ்க்கையில் இது போன்ற உணர்வு ரீதியான உறவு ஏற்பட வாய்ப்பில்லை.
சட்டரீதியான அங்கீகாரம்
திருமணத்தின் மூலம் மட்டுமே சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். லிவிங் டு கெதர் வாழ்க்கையில் இதை எதிர்பார்க்க முடியாது.
தனியாக தவிக்கவேண்டாம்
திருமணம் என்பது தனிமையை விரட்டும் அருமருந்து எனவே தைரியமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். வேலை வாய்ப்பற்றவராக இருந்தாலும், திருமணம் முடிந்தவராக இருந்தால் அது உங்களுக்கு எளிதான,ஆரோக்கியமான காப்பீடு திகழ்கிறது.
அதேபோல் திருமணத்திற்கு பின்னர் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் இருவரும் சேர்ந்து நிறைய பணம் சம்பாதிக்கவும், சேமிக்கவும் முடியும் என்பதும் நிபுணர்களின் ஆலேசானையாகும். என்ன பேச்சிலர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து திருமணம் செய்துக்கொள்ள முடிவெடுத்து விட்டீர்களா?
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் மணவாழ்க்கை
» பாதுகாப்பு தரும் மகாசக்தி
» சருமத்திற்கு பாதுகாப்பு தரும் சத்தான எண்ணெய்கள்
» பெண்களுக்கு பாதுகாப்பு தரும் பெப்பர் ஸ்ப்ரே...
» இந்திய தண்டனைச்சட்டம் பெண்களுக்கு தரும் பாதுகாப்பு
» பாதுகாப்பு தரும் மகாசக்தி
» சருமத்திற்கு பாதுகாப்பு தரும் சத்தான எண்ணெய்கள்
» பெண்களுக்கு பாதுகாப்பு தரும் பெப்பர் ஸ்ப்ரே...
» இந்திய தண்டனைச்சட்டம் பெண்களுக்கு தரும் பாதுகாப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum