குண்டு அப்பாவா? குழந்தைக்கு பாதிப்பு வருமாம்!
Page 1 of 1

Fat Dad
குண்டாக இருக்கும் அம்மாக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் உப்பிய கன்னங்களுடன் பருமனாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதேபோல் தகப்பனுடைய உணவு, உடல் எடை இவையெல்லாம் அடுத்த தலைமுறை பெறப்போகும் நோய்களை தீர்மானிப்பதாக உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கர்ப்பிணிகள் கருத்தரிப்பதற்கு முன்பாக இருந்த எடை, கருத்தரித்த பின்னர் இருக்கும் எடை ஆகியவைதான் குழந்தையை எதிர்காலத்தில் பாதிக்கப்போகும் நோய்களை தீர்மானிக்கிறது. கருப்பைக்குள் குழந்தை வளரும் சூழ்நிலையின் பாதிப்புகள் இவை" என்று நியூ செளத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் மார்கரட் மாரிஸ் கூறியுள்ளார்.
அதேபோல் தகப்பனின் உணவுப்பழக்கம், உடலமைப்பு இவற்றை ஆராய்ந்த நியூ செளத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Dr Sheau-Fang Ng என்ற ஒரு பி.எச்டி. மாணவர் ஒருவர், தகப்பனுடைய உணவு, உடல் எடை இவையெல்லாம் அடுத்த தலைமுறை பெறப்போகும் நோய்களை தீர்மானிப்பதாக உள்ளது என்று கண்டறிந்துள்ளார்.
இந்த ஆய்வில் ஆண் எலிகளுக்கு கொழுப்பும் சர்க்கரையும் நிறைந்த உணவு கொடுக்கப்பட்டு உடல் பருமனாக்கப்பட்டது. இயல்பான எடை கொண்ட பெண் எலிகளுடன் இவை இனப்பெருக்கம் செய்ய வைக்கப்பட்டன. விளைவாகப் பிறந்த பெண் எலிகள் குஞ்சுப்பருவத்திலேயே சர்க்கரை நோய்க்கு ஆளாகி இருப்பது காணப்பட்டது.
இன்சுலின் எனும் என்சைம் நாம் உண்ணும் உணவில் உள்ள குளுகோசை சர்க்கரையாக மாற்றி திசுக்களில் சேமித்து வைக்கிறது. இவ்வாறு திசுக்களில் சேமிக்கப்பட்ட சர்க்கரைதான் நாம் வேலை செய்வதற்கான ஆற்றலைக்கொடுக்கிறது. இன்சுலின் சுரப்பது பாதிக்கப்பட்டால் திசுக்களில் சர்க்கரை சேமிக்கப்படும் நிகழ்வு தடுக்கப்படும்.
நமது உடலுக்கு வேண்டிய ஆற்றல் திசுக்களில் இருந்து பெற இயலாமல் உடல் கொழுப்பில் இருந்து பெறப்படும். சர்க்கரை நோய் எனப்படும் இந்த நோய் உடல் பருத்த ஆண் எலிகளுக்கும்-இயல்பான பெண் எலிகளுக்கும் பிறந்த பெண் குஞ்சு எலிகளிடம் காணப்பட்டது.
தகப்பனிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கு நோய் கடத்தும் திறன் அடர்கொழுப்பு உணவை உண்பதால் விளைந்த விந்துவினால் ஏற்பட்டவை. பெண் எலிக்குஞ்சுகள் சர்க்கரை நோய்க்கு ஆளாவது மட்டுமே இதுவரை ஆய்விற்கு உட்பட்டிருக்கிறது. ஆண் எலிக்குஞ்சுகளின் கதி என்ன என்பது இப்போது ஆய்வில் உள்ளது.
குண்டு அப்பாக்களே உங்கள் தலைமுறையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அம்மா டயட்ல இருந்தாலும் குழந்தைக்கு பாதிப்பு வராது!
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» 'டீன் ஏஜ்' பெண்ணுக்கு பிடித்த அப்பாவா நீங்கள்?
» டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மூளை சுருக்கம் வருமாம்: ஆய்வில் தகவல்
» நீரிழிவு இருந்தால் இதயநோய் எளிதில் வருமாம்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum