மூலநட்சத்திர தீபம்
Page 1 of 1
மூலநட்சத்திர தீபம்
மூல நட்சத்திர தீபம் என்பது நவராத்திரி பூஜை சமயத்தில் சரஸ்வதி ஆவாகனம் செய்யும் மூலநட்சத்திரத்தன்று ஏற்றும் ஒரு அகண்ட தீபம் ஆகும். இந்த தீபமானது சரஸ்வதி விஸர்ஜனம் வரையிலும் அகண்டமாக அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும். இதை ஏற்றுவதற்கு நந்தாதீபம் போன்ற நாக்கு வைத்த விளக்கு அல்லது காமாட்சி விளக்கு உசிதமானது.
மூலா நட்சத்திரத்தன்று காலையில் குளித்து புதிய ஆடை அணிந்து கொண்டு சுவாமியின் முன் ஒரு இடத்தை சுத்தம் செய்து செம்மண் கோலம் போட்டு அலங்கரித்து அதன் மேல் ஒரு சிறிய மர பலகை அல்லது தட்டு வைத்து சிறிய அரிசியை பரப்பி அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றி பூக்களைப்போட்டு நமஸ்கரிக்க வேண்டும்.
பசு நெய் ஸ்ரேஷ்டம் ஆனால் மூன்று நாட்களும் எரிந்து கொண்டிருக்க வேண்டியதினால் அந்த அளவு நெய் கிடைப்பது கஷ்டம். ஆகையால் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம்.விளக்கு மலையேறாமல் அடிக்கடி எண்ணை ஊற்றி திரியை தூண்டிவிட வேண்டும். இரவில் படுப்பதற்கு முன்பு நிதானமாக திரியின் மேல் பாகத்தை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்ற வேண்டும்.
திரியை சுத்தம் செய்யும் பொழுது அணையாமல் இருக்க வேறு திரியை ஏற்றி விட்டு சுத்தம் செய்து பிறகு ஏற்ற வேண்டும். இரவில் தீபம் அணைந்து இருந்தால் காலையில் எழுந்து பல் துலக்கி, முகம், கை, கால் கழுவிக் கொண்டு படுக்கை ஆடைகளை களைந்து விட்டு வேறு ஆடை அணிந்து கொண்டு ஏற்ற வேண்டும். எழுந்த உடன் குளித்து விட்டு ஏற்றுவது மிகவும் நல்லது. இதை சிலர் குடும்ப சம்பிரதாயமாக ஏற்றுகிறார்கள். ஆனாலும் எல்லோருமே ஏற்றலாம்.*
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum