தீபம்: சில குறிப்புகள்
Page 1 of 1
தீபம்: சில குறிப்புகள்
காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். தீபத்தை கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும். தெற்கு முகம் பார்த்து தீபம் ஏற்றுவதை தவிர்க்கவும்.
ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம். புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை, தீயசக்திகள், தொந்தரவுகள் அண்டாது.
பஞ்சு திரி மங்களம் பெருகும். வாழை தண்டு திரி புத்திர பாக்கியம், பட்டு நூல் திரி எல்லாவித சுபங்களும், ஆமணக்கு எண்ணெய் தீபம் அனைத்து செல்வம், தேங்காய் எண்ணெய் தீபம் தேக ஆரோக்கியம், செல்வம், நல்லெண்ணெய் தீபம் எம பயம் அகலும். தாமரை நூல் தீபம் லக்ஷ்மி கடாக்ஷம் நெய் தீபம் சகல சௌபாக்யம், வெண்கல விளக்கு, பாவம் அகலும், அகல் விளக்கு, சக்தி பெருகும்.
எவெர் சில்வர் தவிர்க்கவும், தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லக்ஷ்மி என்று மூன்று முறையும், தீப துர்கா என்று மூன்று முறையும், குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» தீபம்: சில குறிப்புகள்
» தீபம்: சில குறிப்புகள்
» தீபம்: சில குறிப்புகள்
» தீபம் ஏற்றுங்கள்
» கோபுர தீபம்
» தீபம்: சில குறிப்புகள்
» தீபம்: சில குறிப்புகள்
» தீபம் ஏற்றுங்கள்
» கோபுர தீபம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum