சுயமாக சாப்பிட குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்!
Page 1 of 1

Guberan
குழந்தைகள் பிறந்தது முதல் தினசரி ஒவ்வொன்றாக கற்றுக்கொள்கின்றனர். பொருட்களை அடையாளம் கண்டு அவற்றைப் பற்றி கேள்வி எழுப்புகின்றனர். தாய்பால் அருந்து காலம் முடிவடைந்த பின்னர் ஒரு குறிப்பிட்ட வயதுவரை புட்டிப்பால் கொடுத்து பழக்குகின்றனர். பின்னர் அவர்களுக்குத் தேவையான உணவை பெற்றோர்கள் ஊட்டி விடுகின்றனர்.
இரண்டு வயதிற்குப் பின்னர் குழந்தைகளை தாங்களாகவே உண்ணவும், தண்ணீர் பருகவும் பழக்கப்படுத்தவேண்டும். அதுவே அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றது என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுதந்திரமாக உண்ணவேண்டும்
குழந்தைகளை சுதந்திரமாக உண்ணப் பழக்கவேண்டும். அகலமான தட்டில் உணவை போட்டு அவர்களின் கைகளால் எடுத்து உண்ணச் சொல்லாம். கைகளால் எடுத்து உண்ணும் போது எந்த கைகளில் எடுத்து உண்ணவேண்டும் என்பதை தெரிவிக்கவேண்டும். குழந்தைகளின் அருகில் அமர்ந்து எந்த மாதிரியான உணவை குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். டம்ளரில் தண்ணீரை சப்பி குடிக்கச் செய்யலாம், இதனால் தண்ணீர் சிந்துவது தவிர்க்கப்படும். அதிக அளவு தண்ணீர் பருகவும் முடியும்.
குழந்தைகள் உண்ணும் உணவை எளிதில் எடுத்து உண்பதற்கு ஏற்ப அதற்கான தட்டுக்களில் போட்டுத்தரவேண்டும். அவர்கள் தண்ணீர், ஜூஸ் குடிக்கும் பாட்டில் எளிதில் திறக்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
ஒரு பெரிய தட்டில் சாப்பாட்டை பரிமாறி, அதனுடன் காய்கறி, கீரை, முட்டை போன்றவற்றை வைத்து அதையும் சாப்பிடுமாறு ஊக்கப்படுத்துங்கள். கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள்.
மிரட்ட கூடாது
குழந்தைகள் போதும் என்றளவிற்கு சாப்பிட்டதும் அவர்களாகப் போதும் என்று சொல்லுவார்கள். அதற்கு மேலும் அதிகமாக உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம். சாப்பிடப் பழகும் குழந்தைகள் தட்டிலிருந்து சாப்பாட்டை சிந்துவதை ஆரம்பத்தில் தடுக்க முடியாது. அவ்வாறு, சாப்பிடும் போது குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. சாப்பாட்டை அவர்கள் ருசித்துச் சாப்பிட நீங்கள் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.
உணவும் நிறமும்
சில குழந்தைகள் உணவின் நிறத்தை அடையாளம் வைத்துக்கொண்டு அதனை சாப்பிட ஆர்வம் காட்டுவார்கள். பூரிக்கு மஞ்சள் கலர் குருமா, தோசைக்கு சிவப்பு கலர் சட்னி என அடையாளம் வைத்திருப்பார்கள். அவர்கள் சாப்பிடும் போது அவர்களின் உணவினை வண்ணமயமாக தருவது ஆர்வத்தை அதிகரிக்கும்.
எப்படி சாப்பிடுவது
சாப்பிடும் போது எப்படி சாப்பிட்டால் அதிக அளவு உணவை உட்கொள்ள முடியம் என்பதை குழந்தைகளுக்கு பழக்கவேண்டும். குழந்தைகளுக்கு பிடித்தமான உணவை அவர்களின் இடது கண் பார்வைப் பக்கம் படுமாறு வைத்தால் அவர்களால் உணவை எளிதில் கவனிக்க முடியும். ஆர்வமுடன் உணவை எடுத்து உண்பர். குழந்தைகளுக்கு எதிரில் கண்ணாடியை வைப்பது அவர்கள் எவ்விதம் உணவை எடுத்து வாயில் வைக்கின்றனர் என்பதை நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்.
உண்பதற்கு இடைஞ்சல்
அதிக சப்தங்கள் இருந்தால் குழந்தைகள் உண்பதற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தேவையற்ற சப்தங்கள் வராமல் தடுக்கவேண்டும். உணவு மேஜையில் அமர்ந்த உடன் தொலைக்காட்சி சப்தங்களை குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுயமாக ஒரு மாஸ்டர் செக்கப்
» Chennai சனிக்கிழமை, ஜூலை 28, 3:13 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி சுயமாக சம்பாதியுங்கள்... சுயமரியாதையை பேணுங்கள் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. என்றாலும், இல்லத்தரசிகளும் இர
» திராட்சையை சாப்பிட வேண்டியவர்கள்
» உணவகங்களில் சாப்பிட விரும்பும் நாகரீகம்
» பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum