கணவர் ஆயுளை நீட்டிக்கும் கன்னியர்
Page 1 of 1
கணவர் ஆயுளை நீட்டிக்கும் கன்னியர்
தமிழகத்திலுள்ள அம்மன் கோயில்களில் பாதுகாவல், பரிவார தெய்வங்களாகவும் விளங்குவது. இந்த சப்த கன்னிகளாகும். சப்த கன்னிகள் என்பது ஏழு கன்னி தெய்வங்களை குறிக்கும். சப்த என்பது ஏழு திதிகளில் சப்தமி என்பதை குறிப்பதாகும். பட்டாரிகா, தேவகன்யா, பத்மகன்யா, சிந்துகன்யா, சுகஸகன்யா, வனகன்யா, சுமதிகன்யா ஆகிய ஏழு பெயர்களை கொண்ட கன்னிமார்களாகும்.
இவைகள் யாவும் பராசக்தி, துர்கா, காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய அம்பாள் தெய்வங்களுக்கு காவல் தெய்வம் மற்றும் பரிவார தெய்வங்களாகும். பெரும்பான்மையான பழமை வாய்ந்த கோயில்களில் இந்த தெய்வங்கள் வடக்கு திசை நோக்கியே பிரதிஸ்டை செய்யப்பட்டு இருப்பது பராம்பரியமாகும்.
தஞ்சாவூரில் மட்டும் தெற்கு நோக்கி பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காளி, கருப்பண்ணார், குடிப்பாட்டு கோயில்களில் இந்த தெய்வங்கள் வழிபடப்படும். இந்த தெய்வங்களுக்கு வெண்பொங்கலுடன், பொட்டுக்கடலை, நாட்டு சர்க்கரை மற்றும் காதோலை கருகமணி வைத்து பூஜை செய்யப்படும். மாமிசம் வைத்து சாமி படைக்க மாட்டார்கள்.
இது கிராம தேவதைகளில் ஒன்றாகும். குறிப்பாக தொழிலாளர்கள் தெய்வமாகும். சப்த கன்னிகளுக்கு சிகப்பு துணி கட்டுவார்கள். பட்டாரிகா தெய்வத்தை வழிபட்டால் காளி அருள் கிடைக்கும். வனகன்யா தெய்வத்தை வழிபட்டால் துர்கை அருளும், விவசாயம் பெருகும். சிந்துகன்யா தெய்வத்தை வழிபட்டால் ஆறு, குளம் உள்பட நாட்டில் உள்ள நீர் நிலைகள் பெருகும்.
சுகஸகன்யாவை வழிபட்டால் கணவன், மனைவி, குழந்தைகள், உறவினரிடையே நட்பு உண்டாகும். பத்மகன்யாவை வழிபட்டால் வீட்டில் செல்வம் கொழிக்கும். தேவகன்யாவை வழிபட்டால் தேவர்களின் அருள் கிடைக்கும். சுமதி கன்யாவை வழிபட்டால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும், கணவன்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தும். இந்த ஏழு கன்னி மார்களையும் வழிபட்டு வந்தால் அனைத்து சவுபாக்கியங்களையும் அருள்வார்கள்.
மேலும், சுமங்கலிகள் வழிபட்டால் மாங்கல்யம் பலம் அதிகமாகும். திருமணம் ஆகாத கன்னி பெண் வழிபட்டால் விரைவில் திருமணம் ஆகும் என்பது ஐதீகமாகும். ஆடி மாதம் முதல் நாள், ஆடி பெருக்கு ஆகிய நாட்களில் திருமணமான பெண்கள் குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு சென்று, காவிரியில் முளைப்பாரி விட்டு தாலி சரட்டை மாற்றி கட்டிக்கொள்வார்கள்.
அப்படி செய்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வார் என கூறப்படுகிறது.இந்த தெய்வங்களுக்கு ஆடி, தை மாதங்களில் சிறப்பான பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். தை மாதம் முதல் தேதி மற்றும் தை மாட்டுப்பொங்கல் அன்று வீடுகளில் 7 கற்களை வைத்து அபிஷேகம் செய்து வழிபடுவார்கள். மறுநாள் அந்த கற்களை காவிரி ஆற்றில் அல்லது நீரோடையில் விட்டுவிடுவார்கள்.
சப்த கன்னிகளை வழிபட்டால் பெண்களுக்கு, குறிப்பாக திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். கணவனின் ஆயுள் நீண்ட நாட்கள் நீடிக்கும். எனவே, சுமங்கலி பெண்கள், திருமணம் ஆகாத கன்னி பெண்கள் சப்த கன்னிகளை வழிபடுவது சிறந்ததாகும்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» ஆயுளை நீட்டிக்கும் சுறுசுறுப்பு
» சித்தர்களின் ஆயுளை நீட்டிக்கும் வழிமுறைகள்
» என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
» எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்
» என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட

Permissions in this forum:
You cannot reply to topics in this forum