புல்லின் கிழங்கு வகை
Page 1 of 1
புல்லின் கிழங்கு வகை
அருகன் கிழங்கு:
தணியாத பற்பல வெப்பமும். திரிதோஷங்களும் நீங்கும். உடல் வலிமை உண்டாகும்.
கோரைக்கிழங்கு:
இதைமுத்தக்காசு என்றும் கூறுவர். குளிர் சுரம், இரத்த பித்தம், வாத சுரம், பேதி, மனச்சோர்வு, பித்த தாகம், கபரோகம், குதிகாலை பற்றிய வாயு, மூச்சு திணறல், வாந்தி ஆகியவற்றை நீக்கும். உடல் பளபளப்பு, புத்திக்கூர்மை உண்டாகும்.
மருட் கிழங்கு:
நெஞ்சில் இருக்கும் கபக்கட்டு, பெரு வயிறு, பலவித சோகை, மூலம், குன்மம் சம்பந்தமான நோய்களையும் போக்கும்.
வெங்காயம்:
உடல் உஷ்ணம், மூலம் குறையும். அக்கினி மாந்தம், சந்நிபாதம், இருமல், வயிற்று உப்புசம் ஆகியவை விருத்தியாகும்.
நரி வெங்காயம்:
இதை காட்டு ஈருள்ளி என்றும் கூறுவர். சர்ப்ப விஷம், சீதளத்தால் உண்டாகும் கோழை, சுவாசம், மூல கப நோய் ஆகியவை நீங்கும்.
கருணைக்கிழங்கு:
மூல நோய் குணமாகும். பொதுவாக அனைத்து கிழங்குகளாலும் மூல வாயு விருத்தியாகும்.
இவை அனைத்தும் புல்லின் கிழங்கு வகைகள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» புல்லின் வேர் வகை
» அறுகம் புல்லின் மகத்துவம்
» கோரை புல்லின் மருத்துவ குணங்கள்
» செடியின் கிழங்கு வகை
» செடியின் கிழங்கு வகை
» அறுகம் புல்லின் மகத்துவம்
» கோரை புல்லின் மருத்துவ குணங்கள்
» செடியின் கிழங்கு வகை
» செடியின் கிழங்கு வகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum