தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மரத்தின் பட்டை வகை

Go down

மரத்தின் பட்டை வகை Empty மரத்தின் பட்டை வகை

Post  oviya Sun Feb 10, 2013 5:09 pm


அத்தி மரப்பட்டை:

ஆசனக்கடுப்பு, உதிரப்போக்கு, சீதரத்த பேதி, புண், தத்து பிரமேகம் ஆகியவற்றை போக்கும்.

நாவல் மரப்பட்டை:

வாயில் உண்டாகும் நோய்கள், இருமல், பெரும்பாடு, ஈளை, குழந்தைகளின் சிரக தோஷங்கள், வியங்கம், லாஞ்சனம் என்னும் மச்சு பேதங்கள் ஆகியவை நீங்கும்.

முருங்கை மரப்பட்டை:

கப நோய்கள், சந்நிபாத சுரம், வாத நோய்கள் மற்றும் சில விஷங்களும் நீங்கும்.

புளிய மரப்பட்டை:

உள்மாந்தை, குன்ம நோய், வாதாதிசாரம், சுரம், அஜீரணம் ஆகியவை நீங்கும். பித்தமும், பசியும் உண்டாகும்.

பெரு மரப்பட்டை:

அதிசாரம், கிரகணி, உதிர நோய், வாதாதிக்கம் இவைகளை நீக்கும். உடலை வளர்த்து வளப்படுத்தும்.

கருவேல மரப்பட்டை:

ரசவேகத்தின் வேக்காடு முதலிய விரணங்களும், சுரமும், பித்த நோயும் போக்கும். பல் உறுதியாகும்.

கருங்காலி மரப்பட்டை:

பிரமேகம், அதீத மூத்திரம், தந்த மூல நோய், இருமல், சுவாசம் ஆகியவற்றை போக்கும்.

மாவிலங்க மரப்பட்டை:

வாத நோயும், சந்நிகளும், அஷ்டமரி நோயும் நீங்கும்.

எருக்கம் மரப்பட்டை:

சந்நிபாதம், வாத நோய், மேக வாய்வு பிடிப்பு, சுரம், புண், புரைகள், பலவிதமான விஷம் ஆகியவை அனைத்தும் நீங்கும்.

கள்ளி மரப்பட்டை:

நரம்பு சிலந்தியும், கப வாத நோய்களும், சந்நி பாதமும், வாத பிரமேகமும் நீங்கும்.

நொச்சி மரப்பட்டை:

சந்நிபாத்தால் பிறந்த‌ வாதத்தை போக்கும்.

கிளியூரல் மரப்பட்டை:

சுர நோயையும், உடல் கொதிப்பையும் தணிக்கும்.

அக்கார மரப்பட்டை:

சலாதிக்கம், நாவறட்சி, சந்நிபாதம், சுரம், பற்பல தலை நோய், வாத கோபம், உதிர நாற்றம் ஆகியவற்றை நீக்கும்.

கோங்கு மரப்பட்டை:

பிரமேக மூத்திரமும், தாங்கி கொள்ள முடியாத பல் வலியும் நீங்கும். கல் நார் பஸ்பமாகும்.

கொளுஞ்சி மரப்பட்டை:

காட்டு கொளுஞ்சி பட்டை பாலர் மாந்தம், வயிற்று பொருமல், கணச்சூடு, ஆவிரதவாத நோய் ஆகியவற்றை போக்கும்.

பஞ்சவர்க்கம்:

ஆல், அரசு, நாவல், அத்தி, இத்தி என்னும் ஐந்து வகை மரங்களின் பட்டைகளே பஞ்சவர்க்கம் ஆகும். இதனால் இருமல், இரைப்பு, சிலேஷ்ம தோஷம், ஸ்தன வித்திரிக்கட்டி ஆகியவை நீங்கும்.
இவை அனைத்தும் மரத்தின் பட்டை வகைக‌ள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum