மரத்தின் காய் வகை
Page 1 of 1
மரத்தின் காய் வகை
வாழைக்காய்:
பித்த வாந்தி, மனச்சோர்வு, பித்தாதி சுரம், உமிழ் நீர் சுரப்பு, வயிறு உளைதல், உஷ்ணம், இருமல் ஆகியவை நீங்கும். இர்த்த விருத்தியும், பலமும் உண்டாகும். உணவின் அளவு அதிகரிக்கும்.
பலாக்காய்:
அக்கினி மந்தம், வாத கோபம், ஆயாசம், சுவாசம், விந்து விருத்தி ஆகியவை உண்டாகும்.
அத்திக்காய்:
பிரமேகம், வாத நோய், சூலை, உடல் வெப்பம், வீரணம் ஆகியவை நீங்கும். மலங்கழியும்.
முருங்கைக்காய்;
கபம் நீங்கும். விந்து அதிகரிக்கும்.
அருநெல்லிகாய்:
சீதபித்தம், தாகம், காசம், உட்சூடு ஆகியவற்றை போக்கும்.
நெல்லிக்காய்:
பகலில் சாப்பிட்டால் மனச்சோர்வும், கப நோய், வாயில் நீர் சுரப்பு, வவாந்தி, உன்மத்தம், மலபந்தம், தலைச்சுழல், பிரமேகம் ஆகியவை நீங்கும். அழகு உண்டாகும். இதன் புளிப்பால் வாயுவும், துவர்ப்பால் கபமும் நீங்கும்.
புளியங்காய்:
சோருதலையும், பித்த கோபத்தை நீக்குவது தவிர, வாத தோஷத்தை உண்டாக்கும். இதை கர்ப்பம் தரித்த பெண்கள் விரும்புவார்கள்.
மாங்காய்:
விந்து குறைவு நீக்கும். அதிக வாயு, சிரங்கு, தேகம் வெடித்தலோடு கூடிய ஆறாத விரணம், பல் கூசுதல் ஆகியவை உண்டாகும். பசி நீங்கும்.
மிரியங்காய்:
இதனை புளிமாங்காய் என்றும் கூறுவர். இந்த காய்களினால் வாய் கசப்பும், அரோசகமும் நீங்கும். இது சுரரோகிகளுக்கு உதவும்.
பச்சை கடுக்காய்:
இதை பரிதிக்காய் என்றும் கூறுவர். பச்சை கடுக்காயை கொட்டை நீக்கி இடித்து அதில் 5-ல் ஒரு பங்கு உப்பு போட்டு 105 நாட்களுக்கு பிறகு பிசைந்து அதை சாதத்தில் சேர்த்தாவது, தனித்தாவது சாப்பிட்டால் அரோசகம் தீரும். பசி உண்டாகும். மலங்கழியும்.
இத்திக்காய்:
இத்திக்காய்களுக்கு வாதம், மலபந்தம் நீங்கும்.
கொடி எலுமிச்சங்காய்:
கொடி எலுமிச்சங்காய்களுக்கு வாந்தி, பித்தம், மயக்கம், மலபேதி, பித்த அரோசகம் ஆகியவை விலகும்.
எலுமிச்சங்காய்:
வாத, பித்த, கப நோய்களும், வாத சிலேஷ்மம், சூலை, வாந்தி, இடுமருந்து, பித்த உஷ்ணம் இவற்றை போக்கும்.
கலுமிச்சங்காய்:
பார்வைக்கு எலுமிச்சங்காய் போல் தெரியும். கழுமிச்சங்காய் பற்களை விழச்செய்யும். தவிர சீதளத்தையும், வீரிய நஷ்டத்தையும் உண்டாக்கும்.
நாரத்தங்காய்:
வாத நோயும், வாலுள்ள மலக்கிருமியும் நீங்கும். பசி உண்டாகும். இதன் புளிப்பினால் உடல் தூய்மை ஆகும்.
கடார நாரத்தங்காய்:
பித்த நோயும், வாயில் நீர் ஊறலும், ருசியின்மையும் நீங்கும். இது மனச்சோர்வுகளுக்கானது. நோயாளிக்கு நல்லது.
கொளுஞ்சி நாரத்தங்காய்:
இதனை கொடி நாரத்தை , முலை எலுமிச்சை துரிஞ்சி என்றும் கூறுவர். இருமல், ஆமதோஷம், வாத விரணன், கபாதிக்கம், தாகம் ஆகியவற்றை நீக்கும்.
பனை நுங்கு:
நுங்கின் நீரானது வியர்க்குருவை நீக்கும். பசியை உண்டாக்கும். தோலுடன் கூடிய நுங்கு சீதபேதியை விலக்கும்.
இவை அனைத்தும் மரத்தின் காய் வகைகள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மரத்தின் பழ வகை
» மரத்தின் இலை வகை
» மரத்தின் பட்டை வகை
» அரச மரத்தின் மருத்துவ குணங்கள் .......
» மரத்தின் சமூல வகை
» மரத்தின் இலை வகை
» மரத்தின் பட்டை வகை
» அரச மரத்தின் மருத்துவ குணங்கள் .......
» மரத்தின் சமூல வகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum