தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் உணவுகளை சூடு செய்யாதீங்க!

Go down

பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் உணவுகளை சூடு செய்யாதீங்க!  Empty பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் உணவுகளை சூடு செய்யாதீங்க!

Post  ishwarya Sat Feb 09, 2013 2:27 pm



The Hidden Hazards of Microwave Cooking
மைக்ரோவேவ் ஒவனில் உணவுகளை சமைப்பதோ, அடிக்கடி பிளாஸ்டிக் கண்டெய்னர்களின் மூலம் உணவுகளை சூடு செய்வதோ பெண்களின் ஈஸ்ட்ரோஜன் சுரப்பில் சிக்கல் எழும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆரோக்கியமான உணவும், ஆரோக்கியமான சமையல் முறையுமே ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்யும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மனிதர்களின் ஆரோக்கியத்தில் ஹார்மோன்களுக்கு முக்கிய பங்குண்டு. ஹார்மோன்களின் சுரப்பு சமமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அவைகளின் சுரப்பு, குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எண்ணற்ற சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கின்றனர் நிபுணர்கள். சத்தான சரிவிகித உணவு உட்கொண்டால் மட்டுமே ஹார்மோன்களின் சுரப்பை கட்டுக்குள் வைக்கமுடியும். ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களுக்கு அவசியமானது. கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல்,மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே ஏற்படுகின்றன.

அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து காணப்படுகிறது. தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது.

பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உணவுகள்

உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை "ஐசோபிளாவின்' என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.

சென்ஈஸ்ட்ரோஜன் வேண்டாம்

ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, "சென்ஈஸ்ட்ரோஜன்கள்' சேருகின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.

கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

நார்ச்சத்து உணவுகள்

பெண்களுக்கான ஹார்மோன் களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது.

நல்ல கொழுப்பு அவசியம்

ஒமேகா - 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது.

தினசரி 3 லிட்டர் தண்ணீர்

டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். நமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. எனவே நாம் குடிக்கும் தண்ணீர் உடல் செயல்பாடுகளுக்கு உதவுகின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum