அண்டார்டிக் கடலில் பிளாஸ்டிக் மாசு
Page 1 of 1
அண்டார்டிக் கடலில் பிளாஸ்டிக் மாசு
அண்டார்டிக் பெருங்கடல் பகுதி மிகவும் அதிகமான கவலை
அளிக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களால் மாசடைந்திருப்பதை அங்கு சென்ற
தனியார் ஆராய்ச்சிக் குழு ஒன்று கண்டறிந்திருக்கிறது.
ஒரு சதுர கிலோமிட்டர் பரப்பளவுக்கு சுமார் 40,000
பிளாஸ்டிக் கழிவுத் துகள்கள் வரை மிதந்துகொண்டிருப்பதை சுற்றுச்சூழல்
ஆர்வலர்கள் கண்டனர்.
இந்தக் கழிவு, இயற்கையாகக் கரைய முடியாதது என்று
கூறும் அவர்கள் பல நூறாயிரம் ஆண்டுகள் வரை இந்தத் துகள்கள் கடலிலேயே
தங்கியிருக்கும் என்றும், கடைசியாக அவை உணவுச் சங்கிலித்தொடரில்
சேர்ந்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த ஆராய்ச்சிக்குழுவினர் ஒன்றரை மிலியன்
நுண்ணுயிர் இனங்களையும் அண்டார்டிக் பெருங்கடல் பகுதியில் கண்டு பதிவு
செய்திருக்கிறார்கள். இவை அங்கு இருப்பதாக நம்பப்பட்ட நுண்ணுயிரினங்களின்
எண்ணிக்கையை விட மிகவும் அதிகம் என்று தெரிகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பிளாஸ்டிக் பாட்டில்களால் வீட்டை அலங்கரிக்கலாமா!!!
» மாசு, மருவில்லாத வதனத்திற்கு
» மாசு இல்லாத முக அழகு வேண்டுமா?
» மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டு கடன் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum