வெண் சங்கு கழுத்து, பெண்மைக்கு அழகு...!
Page 1 of 1
வெண் சங்கு கழுத்து, பெண்மைக்கு அழகு...!
Neck
கோடை காலத்தில் உடலில் மிகவும் பாதிக்கப்படுவது கழுத்து பகுதிதான். வேர்க்குரு, எண்ணெய்பிசுக்கு போன்றவைகளினால் கழுத்தானது கறுப்பாக மாறிவிடும். முகத்தை பராமரிக்கும் அளவிற்கு கழுத்தை கவனிக்காமல் விடுவதாலேயே சருமப் பகுதி கறுப்பாக காரணமாகிறது. இதற்கு வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தியே கருமையை போக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
வேர்க்குரு நீங்க
வெப்பத்தினால் கழுத்தில் வேர்குரு உருவாகி அரிப்பு ஏற்படும் அதனை நீக்க இளநீரில் சிறிது சந்தனம் சேர்த்து கழுத்தில் பூசி வர வேர்க்குரு நீங்கும். எரிச்சல் நீங்கி இதம் ஏற்படும்.
பாசிப்பயறு மாவு
ஒரு டீஸ்பூன் வெங்காயச் சாறு, சிறிது ரோஸ் வாட்டர், இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணெய், ஒரு ஸ்பூன் பாசிப்பயறுமாவு ஆகிய நான்கையும் கலந்து கழுத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவிவரலாம். வாரம் மூன்று முறை இந்த நடைமுறையை பின்பற்றினால் கழுத்தின் கறுப்பு நீங்கிவிடும்.
கோதுமை, பாசிப்பயறு, ஓட்ஸ் ஆகிய மூன்றின் மாவையும் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இதை கழுத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கழுத்தின் கறுப்பு நிறம் மறையும்.
முட்டைக்கோஸ் இலைகள்
முட்டைக் கோஸின் வெளிப்புற இலைகளை நறுக்கி மிக்சியில் இட்டு. அதன் சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஈஸ்ட், ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி வர சூரிய ஒளியினால் பாதிக்கப்பட்ட கறுமை நிறம் ஓரிரண்டு நாட்களில் மறைந்து போய்விடும்.
தர்பூசணிப் பழச்சாறுடன் பாசிப்பயறு மாவு கலந்து அதனை ஃப்ரிட்ஜில் வைக்கவும் அரை மணி நேரம் கழித்து, அந்த விழுதை எடுத்து கழுத்தில் தடவி வர, வெயிலில் கறுத்துப்போய் வறண்ட சருமம் புதுப்பொழிவு பெறும்.
ஃபேன்சி நகைகள்
சில பெண்களுக்கு ஃபேன்ஸி நகைகள் அணிவதாலும், சிலருக்கு கழுத்தின் பின் பகுதி அதிகமாகக் கறுத்துப் போயிருக்கும். அவர்கள் பாலில் 1 ஸ்பூன் தேன், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருமை உள்ள பகுதிகளில் தடவி, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும் சில வாரங்களிலேயே அந்தக் கருமை நீங்க இயல்பான நிறம் கிடைத்துவிடும்.
மருத்துவ ரீதியான பிரச்சினைகளும் கழுத்து கறுப்பாக இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம். வழக்கமான இந்தப் பராமரிப்பு முறைகள் எதுவும் இதற்கு உதவாது. எனவே தோல் சிகிச்சை நிபுணரைப் பார்க்கலாம். கழுத்தின் பின் பகுதிக்கும் இந்தப் பராமரிப்பு முறைகள் மிக அவசியம்.
மூலிகை பிளீச்சிங்
பேஷியல் செய்வதற்காக அழகு நிலையங்களுக்குப் போகும் போது முகம், கழுத்து இரண்டிற்கும் பேஷியல் செய்யலாம். இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இயற்கை மூலிகைகளைக் கொண்டு செய்யும் ப்ளீச்சிங் மற்றும் பேஷியலுமே சிறந்தவை. அதுதான் முகத்தையும் தோலின் தன்மையும் நல்ல முறையில் பாதுகாக்கும். பேஷியலோடு மசாஜ் செய்யும்போது கழுத்துப் பகுதியிலுள்ள தோலை மென்மையாக்குவதோடு இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum