தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேலையில் பெண், அழகோ, அழகு...!

Go down

சேலையில் பெண், அழகோ, அழகு...! Empty சேலையில் பெண், அழகோ, அழகு...!

Post  ishwarya Thu Feb 07, 2013 6:19 pm

Lakshmi Ramakrishnan
இன்றைய இள மங்கையர் புடவை மீது புதிதாய் மோகம் கொண்டுள்ளனர். இதனை அறிந்து பெண்களின் ஆசைக்கு ஏற்ப பலவித டிசைனர் சேலைகளை களம் இறக்கியுள்ளனர் ஆடை வடிவமைப்பாளர்கள். பட்டு சேலை மட்டுமல்லாது, விலை அதிகமான டிசைனர் சேலைகள் இளம் பெண்களின் கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில் வந்துள்ளன.

எதிலும் புதுமையை விரும்பும் இந்தக் காலத்துப் பெண்கள், சேலை கட்டும் விஷயத்திலும் அதைப் பின்பற்றுகிறார்கள். பாட்டிகளும், அம்மாக்களும் கட்டியது போல இல்லாமல் பாரம்பரிய ஸ்டைலை தவிர்த்து, விதம் விதமாக சேலை உடுத்துவதையே இன்றைய பெண்கள் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பார்ட்டி, ரிசப்சன் போன்ற விழாக்களுக்கு செல்ல என்ன மாதிரி புடவை உடுத்தலாம் என்று கூறியுள்ளனர் அழகு கலை நிபுணர்கள்.

முன்பக்க முந்தானை

பெரிய பார்டர் வச்ச சேலை என்றால் வழக்கமா சேலை கட்டும் ஸ்டைலில் கட்டிக்கொள்ளவேண்டும். முந்தானையை பின்னாலேருந்து எடுத்து முன் பக்கம் கொண்டு வரவேண்டும். பார்டர் பகுதியை சின்ன மடிப்புகளா பின் பண்ணி, வழக்கத்தைவிட நீளமா இருக்கிற மாதிரி வச்சுக்கிறது அழகு. பெரிய பார்டர் வச்ச சேலை, ரொம்ப ஆடம்பரமா வேலைப்பாடு செய்த ஜாக்கெட்டுக்கு இந்த ஸ்டைல் ரொம்ப அழகாக இருக்கும்

பட்டுப்புடவை ஸ்டைல்

சிவாஜி படத்தில் வாணிஸ்ரீ கட்டுவாங்களே அது மாதிரி பட்டு மாதிரியான புடவைகளுக்கு ஏற்ற ஸ்டைல் இது. பழைய கதாநாயகிகள் புடவை உடுத்தும் ஸ்டைல் இப்போது மறுபடியும் பேஷன் ஆகி வருகிறது. பெரிய, அகலமான பார்டர் வைத்த பட்டுப் புடவையை உடம்பைச் சுத்தி, டைட்டாக கட்டவேண்டும்.

பின் பக்கத்துலேருந்து பார்க்கும் போது, பார்டர், அதுக்கு மேல சேலையோட உடல் கலர், அதுக்கு மேல பார்டர், அப்புறம் சேலையோட உடல்பகுதினு அடுக்கடுக்கா தெரியணும். முந்தானையும், வழக்கத்தைவிட கம்மி நீளத்துல இருக்கணும். இந்த மாதிரி சேலையை கட்டிக்கிட்டா வேகமா நடக்க முடியாது. ரிசப்ஷன் மாதிரி ஒரே இடத்துல நிற்க வேண்டி வரும் போது கட்டினா பிரச்னை இல்லை. ஒல்லியா இருக்கிறவங்களுக்கு ரொம்பப் அழகாக இருக்கும்.

டிசைனர் ப்ளவுஸ்

ஆயிரக்கணக்குல செலவழிச்சு பட்டுப் புடவை வாங்கறதை விட, அதே செலவுக்கு டிசைனர் சேலை வாங்க நினைக்கிறாங்க இந்தக் காலத்துப் பெண்கள். திருமணம் மாதிரி நிகழ்ச்சிகளுக்கு பட்டுப்புடவை வாங்கும் போது , அது சாதாரணமா இல்லாமல், ஸ்பெஷலா இருக்க வேண்டும் என்பது இன்றைய பெண்களின் எதிர்பார்ப்பு.

புடவைக்கு ஏற்ப மேட்ச்சிங் பிளவுசுக்கும் நிறைய செலவு செய்து, அழகழகாக தைத்துப் போடுவது இப்பொழுது பேஷனாகி வருகிறது. இப்படி பல ஆயிரம் செலவு பண்ணி வாங்கற புடவையை, சாதாரண ஸ்டைல்ல கட்டினா, புடவையோட அழகு மறைஞ்சிடும். பார்த்துப் பார்த்து டிசைன் பண்ணின ஜாக்கெட்டோட அழகும் தெரியாது. இதைத் தவிர்க்க, இப்பல்லாம் ரிசப்ஷன், பார்ட்டி மாதிரி நிகழ்ச்சிகளில் வித்தியாசமான முறைல சேலை கட்டலாம்.

ஜாக்கெட் அழகு தெரியும்

வழக்கமா சேலை கட்டுவது போல சேலை கட்டி முந்தானைப் பகுதியை எடுத்து சொருகாமல் லூசாக விடவேண்டும். அதாவது ஜாக்கெட் தெரியற மாதிரி விடுவது அழகு. இதுபோல மெலிசான புடவைகள்ல கட்டினா அழகு. முந்தானைப் பகுதியை இடது கைல சுத்திக்கலாம். பார்ட்டி, பொது விழாக்கள்ல நடிகைகளும், மாடல்களும் இந்த மாடல்ல சேலை கட்டிட்டு வருவதைப் பார்க்கலாம். ஜாக்கெட்டோட அழகு எடுப்பா தெரியணும்னு நினைக்கிறவங்களுக்கான ஸ்டைல் இது.

காஸ்ட்லி புடவை

புடவைகளில் வழக்கமா முன்பக்கம் கொசுவம் வைத்து கட்டுவது வாடிக்கை. இடது பக்கம் கொசுவம் வைத்து கட்டுவது இப்போது பேஷனாகி வருகிறது. இதற்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் ரொம்பப் பொருத்தமா இருக்கும். இதுலயும் முந்தானைப் பகுதியை லூசா விட்டு, பின் பக்கம் கொண்டு வந்து, வலது கை இடுக்கு வழியா முன் பக்கம் எடுத்து பின் பண்ணலாம். ரொம்ப காஸ்ட்லியான புடவைகளுக்கான ஸ்டைல் இது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சேலையில் யார் அழகு?- வித்யா, மஹி இடையே போட்டி!
» சேலையில் கடவுள் படம்: இந்து மக்கள் கட்சிக்கு நடிகை குஷ்பு கண்டனம்
» முக அழகு – சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க
»  அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
»  Chennai புதன்கிழமை, ஆகஸ்ட் 22, 9:18 AM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மருமகளும் மகள் தான் சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேற

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum