தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வதோத்ராவில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம்

Go down

வதோத்ராவில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம்  Empty வதோத்ராவில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம்

Post  meenu Thu Feb 07, 2013 6:14 pm

குஜராத் மாநிலம் வதோத்ராவில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு இந்த வார புனிதப் பயணத்தில் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறோம்.

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலைப் பற்றி அறிந்து கொள்வோம்.

இந்த கோயில் சுவாமி வல்லபாய் ராவ் ஜியிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு பல பணிகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி சிதனந்த் சரஸ்வதியிடம் கோயிலில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவர்தான் 1948ஆம் ஆண்டு இந்த கோயிலை புனரமைத்து கட்டினார். அவரது மறைவுக்குப் பிறகு கோயிலில் அறக்கட்டளையிடம்தான் இன்று வரை கோயிலின் பொறுப்பு உள்ளது.

webdunia photo WD
இந்த கோயிலின் நுழைவாயிலே மிகவும் பிரம்மாண்டமாகவும், கலை நயத்தோடும் இருக்கும். கோயிலில் நுழைவாயிலில் உள்ள நந்தி சிலை கருப்பான தோற்றத்துடன் மிகவும் பெரியதாக உள்ளது. நந்தி சிலையுடன் ஆமையின் சிலையும் உள்ளது. இது அதிர்ஷ்டம் மற்றும் சந்தோஷத்தை குறிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் ஒரு புறத்தில் சுவாமி வல்லப் ராவ் மற்றும் சுவாமி சிதானந்தஜியின் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கோயிலின் ஒரு பகுதியில் பெரிய அறை உள்ளது. அதில் பக்தர்கள் பிரார்த்தனை நடத்துகிறார்கள். மறுபுறத்தில் வெள்ளை மார்பல் கற்களால் கட்டப்பட்ட கருவறை உள்ளது. இந்த கோயிலில் உள்ள தூண்களில் ஏராளமான கடவுளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் மேல்தளத்தில் அழகான ஓவியங்கள் அனைவரின் கண்களையும் பறிக்கின்றன.

webdunia photo WD
கற்பக்கிரகத்தில் உள்ள சிவலிங்கம் இறைத்தன்மையுன் காட்சயளிக்கிறது. கற்பக்கிரகம் முழுவதும் வெள்ளியால் வேயப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை தொட பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. தண்ணீர் மற்றும் பால் அபிஷேகத்திற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கோயிலில அனுமனுக்கும், சோம்நாத் மஹாதேவ்கும் தனியான சந்நிதிகள் உள்ளன. சுவாமி சிதானந்த் சரஸ்வதியின் பாதச் சுவடுகளைக் கொண்ட தனி சந்நிதியும் உண்டு.

webdunia photo WD
ஆவணி மாதத்தில் வரும் திரயோதசி நாளில் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் இங்கு வரும் பக்தர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் அனைத்தும் கோயில் அறக்கட்டளை மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது.

எப்படிச் செல்வது

சாலை மார்கம் - காந்திநகரில் இருந்து 115 கி.மீ. தொலைவில் வதோத்ரா உள்ளது. அஹமதாபாத்தில் இருந்து 130 கி.மீ. தொலைவில் உள்ளது.

ரயில் மார்கம் - டெல்லி - மும்பை முக்கிய ரயில் மார்கத்தில் வதோத்ரா ரயில் நிலையம் உள்ளது. நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து நேரடியாக வதோத்ராவிற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

விமான மார்கம் - அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 111 கி.மீ. தொலைவில் வதோத்ரா உள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» காசி போன்ற விமானம் கொண்ட ஆலயம்
» காசி விஸ்வநாதர் கோவில் - சிவகாசி
» அகத்தியர் சிவனை வழிபட்ட தலங்களுள் மயிலாப்பூரில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் ஆலயமும் ஒன்று. இது மிகவும் பழமையான ஆலயமாகும். சென்னை ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையத்திற்கு அருகில் தெற்கே நடேசன் தெருவில் இந்த ஆலயம் உள்ளது. மூலவர் தீர்த்த பாலீஸ்வரர். தீர்த்தம் பாலிக்கும் ஈஸ்
» ஸ்ரீஆனந்த நிதியாம்பிகை சமேத விஸ்வநாதர் ஆலயம்
» காசி போன்ற விமானம் கொண்ட ஆலயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum