கூந்தல் எண்ணெய் பசையா இருக்கா? இதோ சில டிப்ஸ்...
Page 1 of 1

Tips to prevent greasy hair
கோடைகாலம் என்ன, சாதாரணமாக அடிக்கும் வெயிலுக்கே குளித்தது போல் வேர்க்கிறது. இதனால் அழகாக இருந்த நம் கூந்தலானது எண்ணெய் பசையோடு காணப்படுகிறது. அதற்காக தலைக்கு வாரத்திற்கு இரு முறை குளித்தால் கூட எண்ணெய் பசை போக மாட்டீங்குது. இதைவிட குளித்துவிட்டு வந்து முடியில் கை வைத்தால் கூட எண்ணெய் பசை இருக்கிறது. இப்படி இருப்பவர்களுக்கு இதோ சில சூப்பர் டிப்ஸ்...
1. எண்ணெய் பசை போக ஒரு சிறந்த டிப்ஸ்-னா தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். எண்ணெய் பசை அதிகமாக இருப்பவர்கள் தினமும் தலைக்கு குளிப்பது நல்லது. ஏனென்றால் இவர்களது உடலில் எண்ணெய் சுரப்பி அளவுக்கு அதிகமாக சுரக்கிறது. இதனாலே கூந்தல் எண்ணெய் பசையோடு இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் குளித்தால் தலையானது சுத்தமாக இருக்கும்.
2. தலைக்கு குளிக்கும் போது, தலைக்குப் போடும் ஷாம்புவை பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால் தற்போது வந்துள்ள ஷாம்புகள் அனைத்திலும், முடி வறண்டு காணப்படாமல் சற்று எண்ணெய் பசையோடு காணப்பட வேண்டும் என்பதற்காக, அதற்கேற்றவாறு தயாரித்துள்ளனர். ஆகவே அப்பேற்பட்ட ஷாம்புவை தவிர்த்தல் நல்லது.
3. பொதுவாக பெண்கள் அனைவருக்கும் தலையில் கை வைக்காமல் இருக்கவே முடியாது. அப்படி வைப்பதால் கையில் இருக்கும் எண்ணெய் தலையில் தங்கி, பின் முடி பார்க்க எண்ணெய் பசையோடு காணப்படும். ஆகவே தலையில் கை வைக்க வேண்டாம். மேலும் தலைக்கு பயன்படுத்தும் சீப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
4. வெளியே செல்லும் போது ஸ்கார்ப் அல்லது தொப்பியை போட்டு செல்லவும். இதனால் தலையில் தூசி படியாமல் இருக்கும். பெரும்பாலும் சூரிய ஒளி நேரடியாக முடியில் படுவதால் முடி அதிகமாக உடைவதோடு, உதிரவும் செய்யும். ஆகவே மறக்காமல் ஏதேனும் ஒன்றை அணிந்து செல்லுங்கள்.
5. அதிகமாக வேர்த்தால் முடியானது ஈஸியாக எண்ணெய் பசை அடைந்துவிடும். ஆகவே அதிகமாக வேர்ப்பவர்களும் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும்.
6. எலுமிச்சை, எண்ணெய் பசை போக்குவதற்கு சிறந்த ஒன்று. தலைக்கு குளிக்கும் முன், சிறிது எலுமிச்சை சாற்றுடன் தயிரைக் கலந்து தலைக்கு தடவி 30 நிமிடம் கழித்து குளிக்கவும். இவ்வாறு செய்தால் எண்ணெய் பசை குறைவதோடு, தலையில் பொடுகும் வராது.
இவை அனைத்தையும் செய்வதோடு தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் சாப்பிடும் போது காய்கறிகளை அதிகமாக சாப்பிட வேண்டும். இதனால் கூந்தலானது எண்ணெய் பசை அடையாமல் இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கூந்தல் எண்ணெய் பசையா இருக்கா? இயற்கை ஹேர் பேக்ஸ் போடுங்க...
» சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?
» முகம் எண்ணெய் பசையா இருக்கா? ஸ்கரப் பண்ணுங்க...
» கூந்தல் எதுக்கு அதிக எண்ணெய் பசையா இருக்கு?
» எண்ணெய் பசையா..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum