கூந்தல் எண்ணெய் பசையா இருக்கா? இயற்கை ஹேர் பேக்ஸ் போடுங்க...
Page 1 of 1

கூந்தல் எண்ணெய் பசையாக இருந்தால், நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே, அதற்கு கூந்தலுக்கு செயற்கை முறையில் தயாரித்த கெமிக்கல்கள் கலந்த பொருட்களைப் பயன்படுத்தி பராமரிப்பதை விட, இயற்கை முறையில் இருக்கும் ஒரு சில பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது. அதிலும் எண்ணெய் பசை கூந்தலுக்கு கூந்தல் உதிர்தல் மற்றும் பொடுகு போன்றவை அதிகம் ஏற்படும். ஏனெனில் அதிக எண்ணெய் பசையுடன் இருப்பதால், அழுக்குகள் அதிகம் படிந்து தங்கிவிடும். ஆகவே அப்போது அழகு நிலையங்களுக்குச் சென்று பராமரிப்பதை விட, இயற்கை முறையில் வீட்டிலேயே ஹேர் பேக் சிகிச்சையை அளிக்கலாம். அதிலும் அந்த ஹேர் பேக்களை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால், சிறப்பான ஒரு பலனை அடையலாம்.
ஹென்னா - எண்ணெய் பசையான கூந்தலுக்கு ஹென்னா ஒரு சிறப்பான பொருள். அதற்கு இரவில் படுக்கும் முன், 3 டேபிள் ஸ்பூன் ஹென்னா மற்றும் 2 டேபிள் ஸ்பூன் டீயை ஊற்றி, ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்து, அதனை கூந்தலுக்கு தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இதனால் கூந்தலில் இருக்கும் எண்ணெய் பசையை நீக்குவதோடு, கூந்தல் உதிர்தலும் நீங்கும்.
கார்ன் ஃப்ளார் - கார்ன் ஃப்ளாரை வைத்து செய்யப்படும் ஹேர் பேக்கில், கார்ன் ஃப்ளார், 1 டேபிள் ஸ்பூன் சுடு தண்ணீர் மற்றும் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, கூந்தலுக்கு தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை நீரில் அலச வேண்டும். பின்னர் பாருங்கள், கூந்தல் சரியான அளவு எண்ணெயோடு அழகாக காட்சியளிக்கும்.
பூந்திக்கொட்டை - பூந்திக் கொட்டை எண்ணெய் பசை கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. இதனை கூந்தலுக்கு பயன்படுத்தினால், அதிகப்படியான எண்ணெய் மற்றும அழுக்குகள் முழுமையாக குறைந்துவிடும். இது ஒரு சிறந்த முறை. அதற்கு 2 டேபிள் ஸ்ழுன் பூந்திக் கொட்டை பவுடருடன், சிறிது தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, கலந்து கூந்தலுக்கு தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். மேலும் இந்த முறையால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.
முட்டை வெள்ளை கரு - முட்டையின் வெள்ளைக் கருவுடன், 1-2 டீஸ்பூன் புதினா சாற்றை விட்டு, கூந்தலுக்கு தடவி, அரை மணிநேரம் ஊற வைத்து, பின்னர் தவறாமல், கூந்தலுக்கு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இல்லையெனில் கூந்தலில் நாற்றம் ஏற்படும். அதனால் கூந்தலில் எண்ணெய் பசை நீங்கி, மென்மையோடும், பொலிவோடும் காணப்படும்.
மேற்கூறிய அனைத்தும் கூந்தலுக்கு ஏற்ற சிறந்த ஹேர் பேக்ஸ். இவற்றை பயன்படுத்துவதால் கூந்தலுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. முக்கியமாக கூந்தல் விரைவில் மென்மையாக, பட்டு போல் ஆக வேண்டும் என்பதற்காக அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், பின் கூந்தல் வறட்சியடைந்துவிடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கூந்தல் எண்ணெய் பசையா இருக்கா? இதோ சில டிப்ஸ்...
» சுவற்றில் எண்ணெய் பசையா இருக்கா...?
» முகம் எண்ணெய் பசையா இருக்கா? ஸ்கரப் பண்ணுங்க...
» கூந்தல் எதுக்கு அதிக எண்ணெய் பசையா இருக்கு?
» எண்ணெய் பசையா..?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum