தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சபரிமலை சபரிமலை

Go down

சபரிமலை சபரிமலை Empty சபரிமலை சபரிமலை

Post  amma Sun Jan 13, 2013 12:38 pm

சபரிமலை என்பது கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்றபிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சுவாமி ஐயப்பனின் கோவில் இருக்கிறது.

இந்தக் கோவில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான கடல்நீர் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.

நிலக்கல், காளகெட்டி, மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். ஆண்டுதோறும் சுமார் 7 கோடி பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் மிகையான அளவில் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படும் புண்ணியத்தலம் சபரிமலையே ஆகும்.

சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தனும், சாதி, மத, இன, தகுதி அல்லது சமூக அந்தஸ்து போன்ற வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், ஒரே வேட்கையுடனும், ஒரே மந்திரத்தை உட்கொண்டும், அதாவது இறைவனான சுவாமி ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

இருந்தாலும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை மேற்கொள்வதில்லை. மேலும் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு வருவதை தடை செய்துள்ளபடியாலும் மேலும் இதர பல காரணங்களாலும், பொதுவாக பெண்கள் இந்தக் கோவிலுக்கு வருகை புரிவதில்லை.

இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூசை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் (தோராயமாக நவம்பர் 15 முதல் டிசம்பர் 26 வரையிலும்), மகர விளக்கு அன்றும் (சனவரி 14 "மகர சங்கராந்தி'') மற்றும் விஷு (ஏப்ரல் 14), மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.

புனிதப்பயணம் மேற்கொள்வதற்கு முதலில் பக்தர்கள் 41 நாட்கள் கொண்ட விருதத்தை (கடினமான தவம்) பக்தர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். இதற்காக பக்தர்கள் துவக்க நாளன்று உருத்திராட்சத்தினாலோ அல்லது துளசி மணிகளாலோ செய்யப்பட்ட சிறப்பு மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும்.

அப்பொழுது முதலே விரதத்தை மேற்கொள்ளும் அடியார்கள் பொதுவாக மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, பெண்களுடன் தொடர்பு, அநாகரிகமான பேச்சுக்கள் மற்றும் வார்த்தைகளை தவிர்த்தல், மேலும் தலை முடி மற்றும் முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தாமல் இருக்க வேண்டும், மேலும் இது போன்ற விதிமுறைகளை ஆசாரத்துடன் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் உள்ளூர் கோவில்களுக்கு சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் எளிய கருப்பு, நீல அல்லது குங்குமப்பூ நிறத்திலுள்ள பாரம்பரிய துணிகளை மட்டுமே அணிய வேண்டும். தற்பொழுது விரதங்களுக்கான விதிமுறைகளை கெடுபிடியுடன் முந்தைய நாட்களில் இருந்தது போன்று பின்பற்றாவிட்டாலும், மக்கள் பொதுவாக ஒரு விதிமுறைக்கு உட்பட்டு, அனுட்டித்து வருகின்றனர்.

பயணம் மேற்கொள்பவர்களுக்கு முற்காலத்தில் "பெரிய பாதை'' மட்டுமே இருந்தது. காட்டின் வழி செல்லவேண்டும், விலங்குகள் அதிகம், வெள்ளை நிறம் வெகு வெகு தூரம் வரை தெரியும் நிறம் என்பதால் காட்டு விலங்குகளிடமிருந்து தப்ப குறைந்த ஒளி சிதறல் கொண்ட கருப்பு, நீலம் ஆகிய நிறங்கள் ஆகிய துணிகள் பயன்படுத்தினர்.

முந்தைய காலத்தில் காட்டு வழியாக சென்று பம்பா நதியை அடைய வெகு நாட்கள் ஆகும் எனவே, இறைவனுக்கு சமர்பிக்கும் பொருள்கள் ஒரு புறமும், வழி உணவிற்கான பொருள்கள் மற்றொரு புறமுமாக இருமுடி பை ஏற்று சென்றனர்.

நூற்றுக்கணக்கான பக்தர்கள் இன்றும், சுவாமி ஐயப்பன் அன்றைய தினங்களில் மேற்கொண்டது போலவே என்ற நம்பிக்கையுடன், எருமேலியில் இருந்து புறப்பட்டு, பரம்பரை பரம்பரையாக வரும் காட்டு மலைப்பாதைகளில், (சுமார் 45 கிலோ மீட்டர்கள் தூரம் கொண்டது) காலணிகள் அணியாமல், நடந்து செல்வதையே விரும்புகின்றனர்.

இந்தப் பயணத்தின் முதல் பகுதி, எருமேலியில் இருந்து தொடங்கி அழுதா நதி வரை கொண்டு செல்லும். பிறகு அழுதா மலையைத்தாண்டி கரியம் தோடினை அடைய வேண்டும். இப்பொழுது புனிதமான கரிமலையை ஏறிக் கடக்க வேண்டும். அங்கிருந்து செறியனவட்டம், வலியனவட்டம் ஆகிய இடங்களைக் கடந்து முடிவில் பம்பா நதியைச் சேரும். `திருவாபரண கோஷப் பயணம்` மேற்கொள்வோர் ஆறன்முள கொட்டாரம் என்ற இடத்தில் தங்கிச் செல்ல வேண்டும்.

ஆனால் புனிதப் பயணத்தை மேற்கொள்ளும் பல பக்தர்கள் வாகனங்களில் பயணம் செய்து மாற்றுவழிகளில் புனிதமான பம்பா நதிக்கரையை அடைகின்றனர். அதற்குப்பிறகு, புனிதப் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் சுமார் நான்கு கிலோமீட்டார் தூரம் கொண்ட ஏற்றத்துடன் கூடிய (நீலிமலை) காட்டுமலைப்பாதையில் ஏறி சபரிமலையை அடைய வேண்டும்.

ஒரு காலத்தில் கனத்த காட்டுப் பகுதியாக இருந்த இந்த ஒற்றைவழிப்பாதை, தற்பொழுது மேம்படுத்தப்பட்டு, இரு பக்கங்களிலும் கடைகள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய சாலையாக காணப்படுகின்றன.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum