தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?

Go down

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்? Empty தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?

Post  ishwarya Thu May 23, 2013 1:35 pm

உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. சூரியனை மையமாக வைத்து பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.

இந்த வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் 12 பாகங்களாக பிரித்தார்கள். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன. சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள். அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினார்கள்.

அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதால் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது. அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்து வைத்துள்ளார்கள். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார் காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன் பனிக்காலம் (மார்கழி, தை) பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில், இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது. உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் (மதுரை) சித்திரைத் திருவிழா, திருவிடை மருதூர் தேரோட்டம் மற்றும் திருச்சி, காஞ்சி உள்ளிட்ட நகர்களில் கோலாகலத் திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றன.

சூரியனைப் பிரதானமாகக் கொண்ட இந்த வாழ்க்கை முறை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஈர்த்தது. ஆகவேதான் மலையாளம், மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையையே புத்தாண்டாக ஏற்றுள்ளன. அது மட்டுமல்ல,உலகின் பல நாடுகளையும் கவர்ந்தது. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன! மகரத்தில் சூரியன் நுழையும் தை மாதம் மிகுந்த புண்ணிய காலமாகக் கொள்ளப்படுகிறது. காரணம், உத்தராயணம் என்னும் வடக்கு நோக்கி சூரியன் பயணம் துவக்கும் காலம் அது! அது மட்டுமின்றி அறுவடை செய்யப்படும் மன மகிழ்ச்சியான காலம் இது. ஆக, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கல் கொண்டாட்டப்படுகிறது.

சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலுமே விழாவாக்க கொண்டாடப்படுகிறது. சித்திரைத்திங்களின் சிறப்பு.............. ஆண்டு தோறும் ஆறு பருவங்கள் மாறி மாறி வருகின்றன. அவற்றுள் வசந்தம் பொங்கும் சிறப்பை கொண்டது சித்திரை மாதம். இந்த மாதத்தில் இளவேனிற் காலம் இன்பமுடன் எழுகிறது. "வந்தது வசந்தம்'' என்று அனைவரும் மங்களம் பொங்க குதூகலிக்கும் பொன்னான நாள் சித்திரைத் திங்களின் முதல் நாள். கரும்பு வில்லேந்தி மன்மதன் பாணம் பொழியும் பேரின்பத் திருநாள். மாமரங்களும் வேப்ப மரங்களும் பூத்து குலுங்கி நிற்கும் குதூகலப்பெருநாள்.

சித்திரை மாதத்தை "சைத்ரா'' என்றும் "சைத்ர விஷூ'' என்றும் கூறுவர். சித்திரை வருஷப் பிறப்பன்று கோவில்களில் புது வருஷப் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் உண்டு. சித்திரை வருஷ பிறப்பு தினத்தை கேரள மக்கள் விஷூக் கனி காணல் என்று கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் வீட்டிற்கு வருவோர்களுக்கெல்லாம் பணம் கொடுப்பதனை இன்றும் கேரள மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எமதர்ம ராஜனின் கணக்கரான சித்ரகுப்த தேவரின் ப்ரீதிக்காக இந்த சித்ரா பௌர்ணமியைக் கொண்டாடுகின்றனர்.

சித்ரகுப்தன் தனது பாவ புண்ணியங்களை கணக்கிடும் தேவன் அல்லவாப சித்ரகுப்தனைத் திருப்தி செய்வதற்காக விரதம் இருந்து சித்ரகுப்தரை வழிபடு கின்றனர். இவ்விரதம் அனுஷ்டிக்கும் நாளில் பசுவின் பால் பசுவின் மோர் சாப்பிடக்கூடாது. எருமைப்பால் உபயோகிப்பது விசேஷம். உப்பு சேர்க்கக்கூடாது. பயிற்றம் பருப்பும், எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதிப்பது மிகச் சிறப்பாகும். தமிழ் நாட்டில் தஞ்சாவூரை அடுத்துள்ள வாஞ்சியம் என்ற தலத்தில் எமதர்ம ராஜாவின் சந்நிதி உள்ளது.

சித்ரகுப்தரின் சிலையைச் சில கோவில்களில் -ஏடும் எழுத்தாணியும் தாங்கிய கரங்களுடன் கூடிய கோலத்தில் காணலாம். சித்ரா பௌர்ண மியன்று,சித்ரகுப்தனைத் திருப்தி செய்வதற்காகப் பல மன்னர்கள் அன்ன தானம் செய்தனர். இந்த வரலாற்றினை திருச்சி மலைக் கோட்டையிலுள்ள கல்வெட்டு சாசனங்களின்` மூலம் கண்டறியலாம். சோழர்களும் சித்ரா பௌர்ணமி விழாவைக் கொண்டாடியுள்ளனர். சித்ரா பௌர்ணமி விழா மதுரையில் ஒரு பெரிய திருவிழாவாக கொண்டாப்படுகிறது. இவ்வாறு எல்லா வகைகளிலும் சித்ரா பௌர்ணமி சிறப்புற்று விளங்குவதால், பக்த கோடிகள் அந் நந்நாளை மிக சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

மதுரைக்குத் தெற்கே உள்ள திருக்குற்றால மலையில் இருந்து உற்பத்தியாகும், சித்ரா நதியில் சித்ரா பௌர்ணமி தினத்தன்று நீராடுவதினால் நமது பாவங்கள் விலகும் புண்ணியங்கள் பெருகும். சித்திரை மாதம்வரும் அமா வாசையும்,கிருத்திகையும் கூட பண்டிகை களாகக் கொண்டாடப்படுகிறது. எல்லா கோவில்களிலும் இப்பவுர்ணமி தினத்தன்று சுவாமிக்கு விசேஷமான அபிஷேக ஆராதனைகளைச் செய்வர். இம் மாதத்தில் ஆதிசங்கர பகவத் பாதாள் அவதார வைபவமும் ஸ்ரீ இராமானுஜர் சாத்து முறைவைபவமும் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ ராம நவமியும் இம்மாதத்தில் தான்வருகின்றது. ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாளின் ஜெயந்தி மிகவும் சிறப்பானது. மங்களகரமானது. சகல சுபிஷேகங்களையும் தரவல்லது. ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாளின் ஜெயந்தி, ஜெயந்திகளுக் கெல்லாம் ஜெயந்தி. உற்சவங்களுக்கெல்லாம் மேலான உற்சவம். இந்த ஜெயந்தியைக் கொண்டாடினால் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, சிவராத்திரி முதலிய எல்லாவற்றின் பலனும் சித்திக்கும் என்று பரமாச்சாரியாள் அருளியுள்ளார்கள். சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் சுக்ல பஷ பஞ்சமி சிவ பெருமானின் அவதாரமாகிய தட்சணாமூர்த்தி சொரூபமான ஸ்ரீ ஆதிசங்கரர் அவதரித்த திருநாள். ஸ்ரீ ஆதிசங்கர ஜெயந்தியைக் கொண்டாடி களிப்பது நமக்கெல்லாம் நலம் சேர்க்கும் ஓர் நல்ல பண்டிகையாகும்.

சந்தோஷம் பொங்கும் இந்த சித்திரையில் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ஆதிசங்கரர் பஞ்சமி திதியில் அவதரித்தார். ஸ்ரீராமானுஜர் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். சில ஆண்டுகளில் இரு ஆச்சார்யர்களின் ஜெயந்தியும் ஒரே நாளில் வருவதும் உண்டு. இதே சித்திரை மாதத் தில் ஸ்ரீ மகா வேதாந்த தேசிகன் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. இதே போல் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் உடுப்பியில் அவதரித்த மத்வர் ஜெயந்தியும் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum