உடலோடு, உள்ளத்தையும் அழகாக்கும் பாதங்கள்
Page 1 of 1

அழகு என்றாலே முக அழகை மட்டுமே ஒருசிலர் கவனத்தில் கொள்கின்றனர். மொத்த உடலையும் தாங்கும் பாதங்களைப் பற்றி யாரும் கவலைக்கொள்வதில்லை. பாத அழகு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே தற்போது அழகு நிலையங்களில் பெடிக்கியூர் எனப்படும் பாத அழகு பயன்பாட்டில் உள்ளது. பணம் செலவழித்து அழகு நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே எளிதாக பெடிக்கியூர் செய்து கொள்ளலாம்.
கால்களை அதிகம் பாதிப்பது பித்தவெடிப்பு. இது அதிக வலி தருவதோடு கால்களின் அழகையும் பாதிக்கும். அதிக எடை உள்ளவர்கள், ட்ரை ஸ்கின் உள்ளவர்கள், அதிக அழுக்கான இடங்களில் நடப்பவர்கள், தோட்டவேலை செய்பவர்கள் என்று அனைவரையுமே பாத வெடிப்பு தாக்குகிறது.
இறந்த செல்கள் நீங்கும்
கால்களுக்கு ரெகுலரான ஸ்க்ரப்பிங், மாய்ச்சுரைசிங் செய்வதன் மூலம் பித்த வெடிப்புகளை நீக்கிவிடலாம். கால்கள் அதிக நேரம் தண்ணீரில் ஊறினால்தான் ஸ்க்ரப்பிங் செய்வது எளிது. கடினமான தோல்களை எளிதில் நீக்கலாம். கால்களை தேய்க்கவென்றே கடைகளில் ஸ்டீலில் செய்த கைப்பிடி உள்ள ஸ்கிரப்புகள் விற்கின்றனர்.
இதனைக் கொண்டு இறந்த செல்களையும், வெடிப்புகளையும் எளிதாக நீக்கலாம். எங்கெங்கு வெடிப்பு, அழுக்கு இருக்கிறதோ, அங்கேயெல்லாம் இந்த ஸ்க்ரப்பரால் நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். அதிக வெடிப்பு உள்ளவர்களுக்கு இதுவே சிறந்தது.
கடினத் தன்மையை போக்கலாம்
மிகவும் கடினமாக அங்கங்கே முடிச்சு போல சிலருக்கு ஸ்கின் கடினத்தன்மையுடன் இருக்கும். இவர்கள் மெனிக்யூரில் சொன்ன ப்ளேடு வாங்கி அதனைக் கொண்டு தோல்களை சீவிவிடலாம். பிறகு பெடிக்யூர் கிட் அல்லது நெயில் கட்டரிலேயே உள்ள அட்டாச்மெண்ட் கொண்டு நக இடுக்குகளில் உள்ள அழுக்கினை நீக்க வேண்டும். பிறகு கால்களில் சோப் தேய்த்து, பிரஷினைக் கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும்.
இப்போது கால்களை நன்றாக துடைத்துவிட்டு, மாய்ச்சுரைசிங் க்ரீமை கால், விரல் இடுக்கு என்று எல்லா இடங்களிலும் மசாஜ் செய்வது போல் தடவுங்கள். பிறகு கால்கள் உலர்ந்ததும், கைகளுக்கு சொன்ன அதே முறையில் நெயில் பாலீஷ் போடுங்கள்.
கால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , அதனை நீக்க தேவையான மருந்துகளை உபயோகிக்கலாம். இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் தேய்க்கும் அத்தனை மருந்தும் படுக்கையில் பட்டு பாழாகிவிடும். இதனால் கால்கள் சரியாவதும் பாதிக்கப்படும்.
செருப்பு தேர்ந்தெடுப்பதில் கவனம்
பெரும்பாலான பாதங்கள் செருப்பினாலும் பாதிக்கப்படுகின்றன. எனவே கால்களுக்கு செருப்பினை தேர்ந்தெடுக்கும்போதும் கவனம் தேவை. அதிகமான உயரமுள்ள செருப்புகள் அணிய விருப்பமுள்ளவர்கள், அணியும் நேரத்தையாவது குறைந்த நேரமே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பென்சில் ஹீல்ஸ் உபயோகிக்கும் முன்பு நமது கால்கள் நம் எடையை நன்கு பாலன்ஸ் செய்கிறதா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். ஜாகிங், வாக்கிங் செய்ய நல்ல தரமான ஷூக்களையே வாங்குங்கள். செருப்புகள் அணிந்து வாக்கிங் போவதைக் காட்டிலும், ஷூ அணிவதால் பாடி பாலன்ஸ் நன்கு இருக்கும். காற்றோட்டமுள்ள ஷூக்கள் அணிவது கால் தொற்றுநோய்களைத் தடுக்கும்.
எப்போதும் அழகான தோற்றத்தில் இருக்க முகம் மட்டுமல்ல, கை கால்களும் நல்ல பராமரிப்பில் இருப்பது அவசியம். கை, கால்களின் பராமரிப்பினை மாதம் இரண்டு முறை செய்து கொண்டால் போதும். பட்டுப்போன்ற பாதங்கள் பளிச்சென்று கிடைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆஹா... அழகான பாதங்கள்
» வீட்டை அழகாக்கும் நந்தவனம்!
» மங்கையரின் பாதங்கள் ஜோதிடம்
» சருமத்தை அழகாக்கும் அவோகேடா
» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
» வீட்டை அழகாக்கும் நந்தவனம்!
» மங்கையரின் பாதங்கள் ஜோதிடம்
» சருமத்தை அழகாக்கும் அவோகேடா
» சருமத்தை அழகாக்கும் உணவுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum