ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாச நாதர் கோவில்
Page 1 of 1

கும்பகோணத்தில் இருந்து திருநாகேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது பிளாஞ்சேரி. இங்குள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீகரப சூலினிக்கு ஜெய மங்கள யாகம் செய்ய சகல பலன்களையும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இந்த கோவிலின் தலவரலாறு தெய்வீக தன்மை நிறைந்தது.
அதன் விவரம் வருமாறு:- ஒருமுறை மகாவிஷ்ணு தனது பக்தரான பிரகலாதனின் சொல்லை காப்பாற்றுவதற்காகவும், அதே சமயம் அசுரன் இரணியனை கொல்வதற்காகவும், தூணில் இருந்து நரசிம்மராக தோன்றினார். அப்போது அவர் இரணியனை கொன்று அவனின் ரத்தத்தை பருகினார். இதனால் நரசிம்மரின் கோபம் அதிகமானது.
உலகத்துக்கே இதனால் ஆபத்து வருமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதனைகண்டு அஞ்சிய பிரம்மா மற்றும் தேவர்கள் எம்பெருமான் சிவனிடம் சென்று மகாவிஷ்ணுவின் கோபத்தை தடுத்து, உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சிவபெருமானும் உலகத்தை அழிவில் இருந்து காக்கும் பொருட்டு சரபேஸ்வர் அவதாரம் எடுத்து நரசிம்மராக இருந்த மகா விஷ்ணுவின் கோபத்தை தடுத்து நிறுத்தினார்.
எம்பெருமான் சிவன், சரபேஸ்வரராக உருவெடுத்த போது, அவரது இரண்டு இறக்கைகளிலும் இரு சக்திகள் அவருக்கு துணையாக இருந்தன. அதில் ஒன்று சக்தி, மற்றொன்று பத்ரகாளி ஆகிய சக்திகள் அருள்பாலித்தனர். இதேபோன்று மற்றொரு சமயம் உலகத்தில் பெரிய பிரளயம் ஏற்பட்டது. அப்போது உலக காக்க வேண்டிய ரிஷிகள் அனைவரும் சிவனை நோக்கி தவம் புரிய தீர்மானித்தனர்.
அதன்படி திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மாசத்திரம் என்ற ஊரில் பூஜைகளை நடத்தினர். அப்போது தாமதமாக வந்த பிராச முனிவரை மற்ற முனிவர்கள் புறக்கணித்தனர். இதனால் கோபம் கொண்ட பிராச முனிவர் தனியாக தவம் செய்ய தீர்மானித்தார்.
பிராச முனிவர் தவம் புரிய முற்பட்டபோது அசரீரியாக வந்த குரல் பிராசரே உனது கர்ம வினைகளை போக்க முதலில் சூலினி துர்க்கையை பிரதிஷ்டை செய்து வணங்கிய பின் `தவம் மேற்கொள்' என்று எடுத்துரைத்தது. உடனே பிராச முனிவர் சூலினி துர்க்கையை பிரதிஷ்டை செய்து `ஜெய மங்களா' யாகம் செய்து தன் தவத்திற்கு எந்த இடையூறும் நிகழாத வண்ணம் காக்கும்படி வேண்டினார்.
சூலினி துர்க்கையோ பிராச முனிவரின் தவத்திற்கு துணையாக இருந்ததோடு சிவபெருமானை மகிழ வைக்கும் பூஜைகளையும் செய்து அருள்புரிந்தாள். இதனால் மகிழ்ச்சி அடைந்த கைலாசபதியான சிவபெருமானும் பிராச முனிவருக்கு காட்சி கொடுத்தார். பின்னர் எப்பெருமான் இந்த ஆலயத்தில் காமாட்சி உடனுறை கைலாசநாதராக இருந்து அருள் பாலித்து வருகிறார்.
ஞான சக்தியாகவும்,கர்ம வினைகளை போக்குபவளும் ஆன ஸ்ரீ சரபசூலினி, பிராச முனிவரின் தவத்தை காத்ததோடு அங்கு தனிக்கோவில் கொண்டு அருள் ஆட்சி செய்கிறாள். பிராச முனிவரால் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் இந்த இடம் பிராசனஞ்சேரி என்று அழைக்கப்பட்டு வந்தது. தற்காலத்தில் இப்பெயர் மறுவி பிளாஞ்சேரி என்ற பெயரால் விளங்குகிறது.
ஸ்ரீசரபசூலினிஅம்பிகைக்கு பவுர்ணமி அமாவாசை நாள்களில் `ஜெயமங்களா' யாகம் நடைபெறுகிறது. இது தவிர மற்றொரு சிறப்பு அம்சமும் இந்த கோவிலில் உள்ளது. நாம் பிரார்த்தனை செய்து அம்பாளிடம் வைக்கும் எலுமிச்சை பழமானது தானாகவே கீழே இறங்கி வரும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இதுவேறு எங்கும் நடைபெறாத அதிசய செயல் ஆகும். இத்தகைய பெருமைகளை கொண்ட ஸ்ரீசரபசூலிக்கு `ஜெய மங்களா' யாகம் செய்வதினால் எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை, கர்மவினை, பில்லி சூனியம் ஏவல் விலகும், மேலும் வழக்குகளில் வெற்றி, அரசியல் செல்வாக்கு, திருமண தடை விலகும் என்பது ஐதீகம்.

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» அம்மங்குடி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில்
» சாந்த சொரூபி ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்
» முறப்பநாடு ஸ்ரீ கைலாச நாதர் கோயில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum