தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அசைவ உணவு சாப்பிட மாட்டேன்: சிநேகாவின் அழகின் ரகசியம்

Go down

அசைவ உணவு சாப்பிட மாட்டேன்: சிநேகாவின் அழகின் ரகசியம் Empty அசைவ உணவு சாப்பிட மாட்டேன்: சிநேகாவின் அழகின் ரகசியம்

Post  ishwarya Thu Feb 07, 2013 1:23 pm

திருமணத்திற்கு முன்பு இருந்ததை விட பொலிவோடும் பூரிப்போடும் இருக்கிறார் சிநேகா. கணவர் பிரசன்னா உடன் நடிக்கும் விளம்பரங்களில் கூடுதல் அழகாய் தெரிகிறார் இந்த விளம்பர ராணி. சப்பாத்தி மாவு விளம்பரமோ, சாம்பார் பொடி விளம்பரமோ சிநேகாவின் அழகிற்கு அடுத்தபடியாகத்தான் அந்தப் பொருட்கள் தெரிகின்றன. சிநேகாவின் அழகின் ரகசியம் என்ன என்பதுதான் இன்றைக்கு மீடியாக்களின் பேச்சாக உள்ளது.

ஸ்லிம் ஆக இருக்கும் சிநேகாவிற்கு தற்போது சினிமா வாய்ப்புகளும், விளம்பர வாய்ப்புகளும் அதிகம் வருகின்றனவாம். அவரது அழகின் ரகசியம் காய்கறிகள்தானாம்.மட்டன் சிக்கன் என்று வெளுத்து வாங்கிய சிநேகா இப்பொழுது காய்கறிகள் மட்டுமே உணவாக சாப்பிடுகிறார். இதுவே அவரின் அழகை அதிகரித்திருக்கிறது. என்னோட வீட்டினைப் பார்த்தாலே ஏதோ பழக்கடைக்கு வந்தது போலவே இருக்கும். அந்த அளவிற்கு பழங்களை வாங்கி குவித்திருப்பேன் என்கிறார் சிநேகா.

தினசரி மூன்று வேளைக்கும் ஜூஸ் சாப்பிடுவேன். அதுவே உடலில் கண்ட இடங்களில் சதை போடுவதை தடுக்கிறது. சுத்தமாக டீ, காபி பக்கமே போவதில்லை. சப்பாத்தி எனக்கு பிடித்தமான உணவாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் மாமிச உணவின் பக்கமே திரும்பி பார்ப்பதில்லை.

என் அழகிற்கு மற்றுமொரு காரணம் யோகா. தினமும் 2 மணி நேரம் யோகா பயற்சி செய்கிறேன். இதனால் எனக்கு நிறைய பலன் கிடைத்துள்ளது. சாப்பாடு விஷயத்திலும் நிறைய கட்டுபாட்டுடன் இருப்பதோடு குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுகிறேன். மகிழ்ச்சியான இந்த சூழ்நிலையே என் அழகை அதிகரித்துக் காட்டுகிறது என்கிறார் புன்னகை இளவரசி சிநேகா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum