பாசிப்பருப்பு பக்கோடா
Page 1 of 1
பாசிப்பருப்பு பக்கோடா
Moong Dal Pakoda
விடுமுறை நாட்களில் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஏதாவது டிபன் செய்து கொடுக்கவேண்டும். சத்தாகவும் இருக்கவேண்டும், அதேசமயம் அது சுவையானதாகவும் இருக்க வேண்டும். பாசிப்பருப்பு பக்கோடா குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். செய்து கொடுத்து அசத்துங்களேன்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1/2 கப்
பெரிய வெங்காயம் – 2
பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி - அரை இன்ச்
தனியா - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
பக்கோடா செய்முறை
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும். இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும். சுவையான வித்தியாசமான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாசிப்பருப்பு பக்கோடா
» பாசிப்பருப்பு பக்கோடா
» சமையல்:பாசிப்பருப்பு பக்கோடா
» பாசிப்பருப்பு முறுக்கு
» பாசிப்பருப்பு அல்வா
» பாசிப்பருப்பு பக்கோடா
» சமையல்:பாசிப்பருப்பு பக்கோடா
» பாசிப்பருப்பு முறுக்கு
» பாசிப்பருப்பு அல்வா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum