சுவையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு...
Page 1 of 1
சுவையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு...
உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது. மேலும் உடலுக்கு ஊட்டம் தரும் சிறந்த உணவாகும். இது கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும் திறன் கொண்டது. இந்த முட்டைக் கோஸை கூட்டு செய்து சாப்பிட்டால் நன்றாக சுவையாக இருக்கும். இத்தகைய சுவையான கூட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
முட்டைகோஸ் - 1 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
துருவிய தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பாசிப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
வெங்காயம் - சிறிது
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் அந்த முட்டைக் கோஸை நீரில் கழுவி வைத்துக் கொள்ளவும்.
அடுத்து மிக்ஸியில் துருவிய தேங்காய், சீரகம் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பாசிப்பருப்பை கழுவி வைத்துக் கொள்ளவும்.
பின் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் கழுவிய பாசிப்பருப்பை போட்டு தேவையான தண்ணீர் விட்டு மஞ்சள் தூள், மிளகாய்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
பருப்பானது பாதி அளவு வெந்தவுடன் அதில் நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், தக்காளி மற்றும் அரைத்த தேங்காய் கலவையைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, மூடி போட்டு வேக வைக்கவும். பின் அவை அனைத்தும் வெந்தவுடன் அதனை இறக்கி வைக்கவும்.
பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி தாளித்து, அந்த பருப்புக் கலவையில் கொட்டவும்.
இப்போது அருமையான முட்டைகோஸ் பருப்பு கூட்டு தயார்!!! இதனை சாதத்திற்கும், சாப்பாத்திக்கும் தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முட்டைகோஸ் கூட்டு
» முட்டைகோஸ் கூட்டு
» முட்டைகோஸ் கூட்டு
» காய்கறி பருப்பு கூட்டு
» அவரை பருப்பு கூட்டு
» முட்டைகோஸ் கூட்டு
» முட்டைகோஸ் கூட்டு
» காய்கறி பருப்பு கூட்டு
» அவரை பருப்பு கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum