வெஜிடேபிள் கோப்தா கிரேவி
Page 1 of 1
வெஜிடேபிள் கோப்தா கிரேவி
காய்கறிகள் உடலுக்கு மிகுதியான சத்தையும், ஆரோக்கியத்தையும் தருகிறது. ஆனால் அந்த காய்கறிகளை குழந்தைகள் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள். ஆனால் அந்த காக்கறிகளை அரைத்து, சற்று வித்தியாசமாக உருண்டை செய்து கோப்தா கிரேவி போல் செய்து கொடுத்தால், காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகளும் கோப்தா சுவையை விரும்பி சாப்பிடுவர். அத்தகைய வெஜிடேபிள் கோப்தா கிரேவியை செய்வது எப்படி என்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
கோப்தாவிற்கு...
உருளைக்கிழங்கு - 5
கேரட் - 2
பீன்ஸ் - 100 கிராம்
குடைமிளகாய் - 2
முட்டைகோஸ் - 1/2 கப்
வெங்காயம் - 3
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிரேவிக்கு...
இஞ்சிபூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 3
தக்காளி - 2
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
உருண்டை செய்ய...
முதலில் உருளைக்கிழங்கை நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், குடைமிளகாய், முட்டைகோஸ், வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அதில் உப்பு, மிளகாய்த் தூள், எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் அதில் உருட்டிய உருண்டைகளை வறுத்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
கிரேவி செய்ய...
முதலில் வெங்காயம், தக்காளியை நன்கு வெட்டிக் கொண்டு, அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி அரைத்த வெங்காயம் தக்காளி பேஸ்டை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் அதில் இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், சர்க்கரை, தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். கலவையானது சற்று கெட்டியாகும் வரை வதக்கவும்.
பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து, கலவையில் அந்த உருண்டைகளை போட்டு, கொத்தமல்லியைத் தூவி 4 5 நிமிடம் மூடி போட்டு மூடி வேக விடவும்.
பின் அந்த கலவையில் உள்ள சுவையானது உருண்டையில் இறங்கி, நல்ல மணத்துடன் சுவையையும் தருகிறது. இப்போது சுவையான வெஜிடேபிள் கோப்தா தயார்!!! இதனை சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்றவற்றிற்கு சைடு டிஸ் ஆக சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடபிள் கோப்தா
» பச்சைப் பட்டாணி கோப்தா
» ருசியான... பட்டாணி கோப்தா!!!
» மீல் மேக்கர் கோப்தா!!!
» வெஜிடேபிள் சாண்ட்விச்
» பச்சைப் பட்டாணி கோப்தா
» ருசியான... பட்டாணி கோப்தா!!!
» மீல் மேக்கர் கோப்தா!!!
» வெஜிடேபிள் சாண்ட்விச்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum