ருசியான... பட்டாணி கோப்தா!!!
Page 1 of 1
ருசியான... பட்டாணி கோப்தா!!!
கோப்தாவில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் அதில் பட்டாணி கோப்தா மிகவும் சுவைமிக்கது. இந்த கோப்தாவை ரொட்டி மற்றும் சாதத்துடன் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் பட்டாணி என்றால் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆகவே இந்த டிஷ் கூட மிகவும் பிடிக்கும். அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Peas Kofta
தேவையான பொருட்கள்:
பட்டாணி - 3 கப் (வேக வைத்து, மசித்தது)
வெங்காயம் - 1 (அரைத்தது)
கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் மசித்து வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, அதோடு கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து, சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் அந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சீரகம், மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
பின்பு அதில் அரைத்த வெங்காயத்தை சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் சிறிது உப்பை சேர்த்து நன்கு வதக்கி, 3-4 கப் தண்ணீர் விட்டு, கொதிக்க விடவும்.
பிறகு அதில் பொரித்து வைத்துள்ள பட்டாணி கலவையை போட்டு, சிறிது நேரம் வேக விட்டு இறக்கவும்.
இப்போது சுவையான பட்டாணி கோப்தா ரெடி!!!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பச்சைப் பட்டாணி கோப்தா
» வெஜிடபிள் கோப்தா
» மீல் மேக்கர் கோப்தா!!!
» வெஜிடேபிள் கோப்தா கிரேவி
» ருசியான புளியோதரை
» வெஜிடபிள் கோப்தா
» மீல் மேக்கர் கோப்தா!!!
» வெஜிடேபிள் கோப்தா கிரேவி
» ருசியான புளியோதரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum