கார போளி
Page 1 of 1
கார போளி
குழந்தைகளுக்கு தினமும் தோசை, இட்லி, சப்பாத்தி என்று செய்வதோடு, அதற்கு தனியாக சட்னி வேறு தனியாக செய்து பள்ளிகளுக்குக் கொடுத்திருப்போம். ஆனால் அவற்றை சாப்பிட்டு குழந்தைகளுக்கே அழுத்து போய் இருக்கும். ஆகவே அவர்களுக்கு பிடித்தவாறு, ஈஸியாக முறையில் ஒரு டிஸ் காலையில்செய்ய வேண்டுமென்றால், அதற்கு கார போளி தான் சரி!!! இதற்கு எந்த சைடு டிஸ்-உம் தேவையில்லை.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப்
உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
எலுமிச்சை பழச்சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். பிறகு அதனை தோல் உரித்து, கட்டியின்றி பிசையவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் அந்த பிசைந்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதோடு வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு, உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அதில் உப்பு, தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு போல பிசைந்து, ஒரு மணி நேரம் மூடி ஊற வைக்கவும். பின் ஊறிய மாவில் ஒரு கால் கப் எண்ணெய் சேர்த்து, மாவு எண்ணெயை உறிஞ்சும் வரை நன்கு மென்மையாக பிசையவும்.
பின் அந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போல் செய்து , அதன் நடுவில் அந்த உருளைக்கிழங்கு கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மறுபடியும் சப்பாத்தி போல் தேய்க்கவும். அவ்வாறு தேய்க்கும் போது கவனமாக தேய்க்க வேண்டும். முக்கியமாக அழுத்தி தேய்க்க கூடாது. இல்லையெனில் உருளைக்கிழங்கு கலவை வெளியே வந்துவிடும்.
இப்போது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்த போளிகளை போட்டு, இரண்டுபுறமும் எண்ணெய் ஊற்றி திருப்பிப் போட்டு நன்கு வேக வைத்து சுட்டெடுக்கவும்.
இதோ சுவையான கார போளி ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum