ஆரோக்கியமான...ஓட்ஸ் தயிர் பாத்!!!
Page 1 of 1
ஆரோக்கியமான...ஓட்ஸ் தயிர் பாத்!!!
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், நிறைய பேர் உணவு சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அத்தகையவர்களுக்கு உடல் எடையை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைக்கவும் ஒரு சிறந்த ரெசிபி உள்ளது. அது தான் ஓட்ஸ் மற்றும் தயிரை வைத்து செய்யக்கூடிய ரெசிபி. இதை மதிய வேளையில் உணவில் தயிர் சாதத்திற்குப் பதிலாக சேர்த்துக் கொள்ளலாம். இப்போது அந்த ஓட்ஸை வைத்து எவ்வாறு ஓட்ஸ் தயிர் பாத் ரெசிபி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்...
ஓட்ஸ் - 200 கிராம்
தயிர் - 200 கிராம்
கேரட் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு
கறிவேப்பிலை - 7
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேரட்டை துருவி வைத்துக் கொள்ளவும். பின் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கி, பிறகு துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு வதக்கவும்.
பின் அதில் தயிர் மற்றும் சிறிது உப்பை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, பிறகு அதில் ஓட்ஸ் சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது ஆரோக்கியமான ஓட்ஸ் தயிர் பாத் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum